Img செல்போனில் அழைத்து கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்: 6 பேர் கைது College girl molested 6 people arrested
தர்மபுரி, டிச. 17–
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராஜகணபதி. இவரது மகள் வித்யா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர் தான் பெயர் பிரபு என்றும் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கள்ளியூரை சேர்ந்தவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். தொடர்ந்து பேசிய அந்த நபர் உன்னுடைய தாயார் தற்போது எங்கள் வீட்டில் உள்ளார். இதனால் அவரை வந்து அழைத்து செல்லுமாறு அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மாணவி வித்யா கள்ளியூர் கிராமத்துக்கு பஸ்சில் வந்தார். அப்போது அவரை பிரபு மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் அவரை ராமியம்பட்டி காப்பு காட்டு பகுதிக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்த அவர்கள் மாணவி வித்யாவை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து அங்கு இருந்து தப்பி வந்த மாணவி வித்யா பாப்பிரெட்டிப்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி தேடினர்.
பின்னர் இது தொடர்பாக பிரபு, சம்பத், ரமேஷ், அஜித்குமார், மற்றொரு பிரபு, வெள்ளையன் ஆகிய 6 பேரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?