Tuesday, 17 December 2013

நியூசிலாந்தில் இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை two women jailed 8 years for killing indian youth in new zealand

two women jailed 8 years for killing indian youth in new zealand நியூசிலாந்தில் இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற பெண்களுக்கு 8 ஆண்டு சிறை தண்டனை two women jailed 8 years for killing indian youth in new zealand

two women jailed 8 years for killing indian youth in new zealand
மெல்போர்ன், டிச.18-

இந்திய வாலிபரை உடலுறவுக்கு அழைத்து அடித்துக் கொன்ற 2 பெண்களுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 8 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்திய வம்சாவழியினரான அமந்தீப் சிங்(22) நியூசிலாந்தின் கிஸ்போர்ன் நகரில் வசித்து வந்தார். திருமணமான இவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி  கிஸ்போர்ன் நகரின் வழியாக காரில் சென்றுக் கொண்டிருந்த போது சாலையோரமாக நடந்து சென்ற கிரிஸ்டல் போக்கை(25)என்ற பெண் அமந்தீப் சிங்கிடம் லிஃப்ட் கேட்டார்.

அவரும் சம்மதித்து அந்த பெண்ணை காரில் ஏற்றிக் கொண்டார். போகும் வழியில் இருவருக்கும் இடையில் நடந்த பேச்சில் கிரிஸ்டலை அமந்தீப் சிங்குக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இருவரும் செல்போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டனர்.

அதன் பின்னர், மெஸேஜ் மூலமாக இருவரின் நட்பு மேலும் நெருக்கமானது. ஒரு கட்டத்தில், கிரிஸ்டல் போக்கை அமந்தீப் சிங் உடலுறவுக்கு அழைத்தார். முதலில் மறுப்பது போல் பாவனை காட்டிய கிரிஸ்டல், திடீரென்று அமந்தீப் சிங்கிற்கு ஒரு மெஸேஜ் அனுப்பினார்.

தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாகவும் தனது வீட்டிற்கு வந்தால் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கிரிஸ்டல் தெரிவித்தார். இதனையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி நள்ளிரவில் அமந்தீப் சிங் தனது காரில் கிரிஸ்டல் வீட்டிற்கு தனியாக சென்றார்.

கிரிஸ்டலின் வீட்டில் இன்னொரு இளம் பெண்ணும் உடன் இருந்தார். கெய்ட்டி கடற்கரைக்கு சென்று நாம் 3 பேரும் உல்லாசமாக இருக்கலாம் என்று அமந்தீப் சிங்கின் மனதில் கிரிஸ்டல் ஆசை தீயை மூட்டினார். கள்ளுண்ட குரங்காக மாறிப்போன அமந்தீப் சிங், 2 பெண்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கெய்ட்டி கடற்கரைக்கு சென்றார்.

இதற்கிடையில், அமந்தீப் சிங்கை காணவில்லை என அவரது குடும்பத்தார் போலீசில் புகார் அளித்தனர். புகாரையடுத்து விசாரணை நடத்திவந்த போலீசார், கெய்ட்டி கடற்கரையில் உள்ள ஒரு புதர் மறைவில் இருந்து அமந்தீப் சிங்கின் அழுகிப்போன பிரேதத்தை கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி கண்டெடுத்தனர்.

பிரேத பரிசோதனையில் அமந்தீப் சிங் அடித்து கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவரை கிரிஸ்டலும் அவரது தோழியும் அடித்து கொன்றுவிட்டு, அமந்தீப் சிங்கின் கிரெடிட் கார்ட் மற்றும் காரை இருவரும் திருடிச் சென்றதையும், அந்த கிரெடிட் கார்ட் மூலம் ஏ.டி.எம்.மில் இருந்து 2 பெண்களும் பணம் எடுக்க முயன்றதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், கிஸ்போர்ன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். போலீஸ் தரப்பு சாட்சியாக அமந்தீப் சிங் மற்றும் கிரிஸ்டல் ஆகியோருக்கு இடையில் நிகழ்ந்த 166 மெஸேஜ்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. விபச்சாரத்திற்காக அந்த வாலிபரை ஆசைகாட்டி வரவழைத்து, பணம் பறிக்கும் நோக்கத்தில் அடித்துக் கொன்றுவிட்டு, காரையும், கிரெடிட் கார்டையும் திருடிய குற்றத்திற்காக 2 பெண்களுக்கும் தலா 8 ஆண்டு 8 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி முர்ரே கில்பர்ட் தீர்ப்பளித்தார்.
...

two women jailed 8 years for killing indian youth in new zealand

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger