Sunday, 6 October 2013

மருமகளை கற்பழித்துக் கொன்ற மாமனார் கைது Man arrested for seduction and murder of daughter in law

மேற்கு வங்காளத்தில் மருமகளை கற்பழித்துக் கொன்ற மாமனார் கைது Man arrested for seduction and murder of daughter in law

Tamil NewsYesterday,

கொல்கத்தா, அக்.7-

மேற்கு வங்காள மாநிலம், பரதமன் மாவட்டம் சோர்டங்கா கிராமத்தை சேர்ந்த ராக்கி(20) என்பவர் மர்மமான முறையில் நேற்று முன்தினம் தூக்கில் பிணமாக தொங்கினார்.

இவரது கணவர் சஞ்ஜீவ் பெங்களூரில் வேலை செய்து வருவதால் தனது மாமனாரின் வீட்டில் ராக்கி வாழ்ந்து வந்தார்.
 
மகளின் அகால மரணம் பற்றிய செய்தி அறிந்த ராக்கியின் தாயார் போலீசாரிடம் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். சில தினங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்ற போலீஸ்காரரான தனது மாமனார், தன்னை கற்பழித்து விட்டதாகவும், இதுபற்றி யாரிடமாவது சொன்னால் தீர்த்துக் கட்டிவிடுவதாகவும் ராக்கி என்னிடம் அழுதபடி போன் செய்து கூறினாள்.

பெங்களூரில் இருக்கும் உன் கணவர் வரும் வரை பொறுத்திரு. அவரிடம் விஷயத்தை சொன்ன பிறகு என்ன செய்கிறார் என்று பார்ப்போம் என்று நான் சமாதானப்படுத்தினேன்.

உண்மையை என்னிடம் ராக்கி சொல்லி விட்டாள் என்பதை அறிந்து மாமனார் அவளை கொன்றுவிட்டு தூக்கு மாட்டிக்கொண்டு ராக்கி தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுகிறார்.

உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் ராக்கியின் தாயார் அளித்த புகாரையடுத்து ஹர கோவிந்த் பானர்ஜி(62) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
Show commentsOpen link

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger