இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற 2 போலீசார் டிஸ்மிஸ் 2 Delhi cops dismissed for molesting girl
Tamil NewsYesterday,
புதுடெல்லி, அக்.7-
வழிதவறி தவித்த இளம்பெண்ணை கற்பழித்த 2 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது.
சம்பவத்தன்று டெல்லி விகாஸ்புரியில் உள்ள போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே வழிதவறி வந்த இளம்பெண்ணை பார்த்த போலீஸ்காரர் அமீத் டோமர் என்பவர் அவளிடம் நைசாக பேசி அதே குடியிருப்பில் வசிக்கும் குர்ஜிந்தர் சிங் என்பவரின் வீட்டுக்கு அழைத்து சென்றார்.
அங்கே அமீத் டோமரும், குர்ஜித் சிங்கும் அந்த பெண்ணை கற்பழிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து விடுபட அவள் போட்ட கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்கள் மகளிர் அவசர உதவி மையத்துக்கு தகவல் அளித்தனர்.
அவசர உதவி மைய போலீசார் விரைந்து வந்த அந்த பெண்ணை மீட்டு அவளை கற்பழிக்க முயன்ற இருவரையும் கைது செய்தனர்.
இதனையடுத்து, வேலியே பயிரை மேய்ந்த கதையாக இளம்பெண்ணை காவலர் குடியிருப்பில் கற்பழிக்க முயன்ற 2 போலீசாரையும் அதிரடியாக பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்து டெல்லி காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?