நீலாங்கரையில் டாக்டர் வீட்டை உடைத்து அழகியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர்கள் doctor house break enjoy with lady youths arrest in Neelankarai
Tamil NewsToday,
திருவான்மியூர், அக் 6–
நீலாங்கரை 'புளூபீச்' ரோட்டை சேர்ந்தவர் அமிர்தாபிர்லா டாக்டரான இவர் பங்களா வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றார். நேற்று இரவு திரும்பி வந்தபோது வீட்டு கதவு பூட்டு உடைந்து திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது ஏ.சி. அறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. உள்ளே ஆட்கள் நடமாட்டம் காணப்பட்டது. எனவே அவர்கள் கொள்ளையர்களாக இருக்கலாம் என சந்தேகம் அடைந்த அமிர்தபிர்லா நீலாங்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் பங்களா வீட்டை சுற்றி வளைத்து உள்ளே புகுந்தனர். உள் பக்கமாக பூட்டப்பட்ட ஏ.சி. அறையை தட்டி உள்ளே இருந்தவர்களை வெளியே வருமாறு அழைத்தனர்.
போலீசார் வந்திருப்பதை அறிந்ததும் அறையில் இருந்த 2 வாலிபர்களும் ஒரு இளம்பெண்ணும் வெளியே வந்தனர். அறையை போலீசார் சோதனை செய்தபோது கழிவறையில் பதுங்கி இருந்த மற்றொரு வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் நீலாங்கரையை சேர்ந்த மணிகண்டன், விஜய், ராஜா என்பதும் பிடிபட்ட பெண் கொட்டிவாக்கத்தை சேர்ந்த 17 வயதுடைய இளம் பெண் என்பதும் தெரிந்தது. பூட்டிய பங்களாவை உடைத்து 3 வாலிபர்களும் பெண்ணுடன் ஏ.சி. அறையில் ஒரு வாரம் உல்லாசம் அனுபவித்துள்ளனர்.
மது பாட்டில்களை பிரிட்ஜில் வாங்கி வைத்தபடி டி.வி. பார்த்தபடி ஜாலியாக இருந்தனர். செலவுக்கு பணம் இல்லாததால் பித்தளை 'ஷவர்' குழாய்களை விற்று இருப்பது தெரிந்தது.
லாட்ஜில் போலீஸ் கெடுபிடிக்கு பயந்து பூட்டிய வீட்டை உடைத்து ஜாலியாக இருந்ததாக பிடிபட்ட 4 பேரும் தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
பூட்டிய பங்களா வீட்டிற்குள் புகுந்து வாலிபர்கள் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்த சம்பவம் நீலாங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
...
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?