தமிழ்ப்படத்தில் 'குத்தாட்டம்'! : பிரஸ்மீட்டில் ரிகர்சல் பார்த்த கிரிக்கெட் வீரர் பிராவோ
by abtamil
Tamil newsToday,
இதுவரை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கங்ணம் ஸ்டைல் டான்ஸ் மட்டுமே ஆடிக்கொண்டிருந்த பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோ முதல்முறையாக ஒரு தமிழ்ப்படத்தில் செமத்தியாக குத்தாட்டம் போடுகிறார்.
மேற்கத்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் தான் பிராவோ. ஆல்ரவுண்டராக கலக்கி வரும் இவர் ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். விளையாடிக் கொண்டிருக்கும் போது கேட்ச் பிடித்தாலோ, விக்கெட் எடுத்தாலோ மைதானத்தில் இவர் ஆடும் கங்ணம் டான்ஸுக்கு ரசிகர்கள் எக்கச்சக்கம் உண்டு.
அப்படி மைதானத்தில் ஆடியதாலோ என்னவோ இப்போது அவர் சினிமாவிலும் டான்ஸ் ஆடப்போகிறார். அதுவும் தமிழ்ப்படத்தில் என்பது தான் கூடுதல் விசேஷம்.
தமிழில் ராஜன் மாதவ் டைரக்ட் செய்யும் 'உலா' என்ற படத்தில் தான் பிராவோ குத்தாட்டம் போடுகிறார். மைதானத்தில் இவரது டான்ஸை பார்த்து பிடித்துப் போய் பிராவோவை டான்ஸ் ஆட கூட்டி வந்தாராம் ராஜன் மாதவ். ராஜன் மாதவ் ஏற்கனவே சேரன், பிரசன்னா இணைந்து நடித்த 'முரண்' என்ற படத்தை டைரக்ட் செய்தவர்.
பாண்டிசெல்வம் என்ற புதுமுக பாடலாசிரியர் எழுதியுள்ள இந்தப்பாடலுக்காக ஏ.வி.எம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமாக செட் போடப்பட்டுள்ளது. அங்கு தான் பிராவோ ஆடும் பாடல் காட்சியை படமாக்குகிறார்கள்.
இதுகுறித்து இன்று அந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் நம்மை சந்தித்த பிராவோ "தமிழ்ப்படத்தில் டான்ஸ் ஆடுவது சந்தோஷமாக உள்ளது" என்றார்.
நான் பாலிவுட் படங்களை நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன். பாலிவுட்டில் பிரபல நடிகர் ஷாருக்கானை எனக்கு பிடிக்கும். அவர் நடித்த மை நேம் இஸ் கான் படம் எனக்கு பிடித்த படம்.
என்ற பிராவோவிடம் அரசியலுக்கு வரும் ஆசை உண்டா? என்று ஒரு நிருபர் கேட்க, அப்படி ஒரு ஆசை எனக்கு இல்லை. கிரிக்கெட் விளையாடணும், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்கணும் இதுதான் என்னோட ஆசை" என்றும் கூறிய பிராவோ முன்னதாக பிரஸ்மீட் மேடையிலேயே 'உலா' படக்குழுவுடன் சேர்ந்து ஒரு சூப்பரான குத்தாட்டத்தை போட்டு ஆச்சரியப்படுத்தினார்.
இது ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் இன்னும் வரல என்று சொல்லும் அளவுக்கு நடனத்தில் பட்டையை கிளப்பினார் பிராவோ.
அடுத்து என்ன ஹீரோதானே..?
Show commentsOpen link
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?