Friday, 13 September 2013

ப்ரியாமணிக்கு திருமணமாம்! Priyamani marriage news

ப்ரியாமணிக்கு திருமணமாம்!

ஆ.Tamil news

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார். 

பருத்தி வீரன் மூலம் தமிழ் ரசிர்களின் மத்தியில் பிரபலமானார் நம்ம முத்தழகு.

அடுத்து ஓரிரு படங்களில் நடித்த அவர் படிப்படியாக தமிழ் சினிமாவில் காணாமல் போனார்.

சமீபத்தில் சென்னை எக்ஸ்பிரஸ் இந்திப் படத்தில் ஒற்றைப் பாடலுக்கு நடனமாடினார்.

தற்போது கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் வரும் வாய்ப்புகள் திருப்தியாக அமையவில்லை என்று தெரிவித்த ப்ரியா மணி, இப்போது தனது திருமணம் குறித்து சீரியஸாக சிந்திக்க ஆரம்பித்துள்ளாராம்.

இதுகுறித்து அவரிடம் கேட்டால், இன்னும் இரண்டு ஆண்டுகளில் எனக்குத் திருமணம் நடக்கலாம்.

ஆனால் நிச்சயம் பெற்றோர்களின் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணமாக இருக்கும்.

மேலும் முன்பின் தெரியாத ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டு பின்னர் வருத்தப்படுவதை விட அவரைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு திருமணத்தைப் பற்றி முடிவு செய்வதே பொருத்தமாக இருக்கும் என்கிறார்.

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger