அஜித் தவறவிட்ட ஹிட் படம்
சினிமாவில் மேலும் ஒரு ஹிட் படத்தை தவறவிட்டுள்ளாராம் நடிகர் அஜித்.
சினிமா பின்னணி இல்லாமல் முன்னணி நடிகராக உயர்ந்தவர் அஜித்.
காதல் படங்களில் நடித்த வந்தவருக்கு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த தீனா படம் திருப்பு முனையாக அமைந்தது.
தற்போது ரசிகர்களின் மத்தியில் தல என்ற பெயரோடு தலைகணம் இல்லாமல் வலம் வருகிறார்.
கஜினி காக்க காக்க மற்றும் ந ந்தா போன்ற படங்களில் இவர் நடிப்பதாக இருந்தது ஆனால் சில காரணங்களால் சூர்யா நடித்தார்.
அதே போல் நான் கடவுள் படத்திலும் அஜித்துக்குப் பதிலாக ஆர்யா நடித்தார்.
இப்படி அஜித் நடிக்க இருந்து மாற்று நடிகர்கள் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அப்படத்தின் நாயகர்களை உச்சத்திற்கும் கொண்டு சென்றது.
இதேபோல் தற்போது அஜித் நடிக்க இருந்த படம் வேறு நடிகர் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
அந்தப்படம்தான் கோ. ஒளிப்பதிவாளராக இருந்த கே.வி. ஆனந்த் இயக்கிய படம்.
அவர் இந்த கதையை அஜீத்துக்காக உருவாக்கினாராம். அதன்பின் சூர்யாவிடம் சென்றதாம். அதன்பின் சிம்புவிடம் கைமாறி கடைசியாக ஜீவா நடித்தாராம்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?