பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Bangalore Police arrest suspected serial child
பெங்களூர், ஆக. 27-
பெங்களூரில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தையை கடத்தி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். குழந்தைகளை கடத்தும் அந்த ஆசாமி, வெகு தூரம் கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் விடுவித்துள்ளான். இதனால் அனைத்து குழந்தைகளும் வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், குழந்தைகள் கடத்தல் வழக்கு தொடர்பாக, 30 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 31 கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளான்.
மேலும் பல்வேறு பைக், நகை திருட்டுக்கள் மற்றும் மோசடியிலும் அவன் ஈடுபட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?