கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்: உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கைது Samajwadi UP MLA arrested in Goa bar
பனாஜி, ஆக.28-
உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா போலீசார் நேற்று கைது செய்தனர்.
பனாஜி நகரில் உள்ள நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அந்த விடுதிக்கு விரைந்த போலீசார், தன்னிலை மறந்து போதையில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிலரை கைது செய்தனர்.
பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 6 பெண்களையும் அந்த விடுதியில் இருந்து போலீசார் மீட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங் என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
உத்தரபிரதேச சமாஜ்வாதி கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான இவரது மாமனார் அஜய் பிரகாஷ் சிங், முலாயம்சிங் யாதவிற்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.எல்.ஏ. மகேந்திர சிங் குத்தாட்ட விடுதியில் கைது செய்யப்பட்ட தகவலை முறைப்படி உத்தரபிரதேச சபாநாயகருக்கு தெரிவித்து விட்டதாக கோவா போலீசார் தெரிவித்தனர்.
அவர் மீதும் அவருடைய கூட்டாளிகள் இருவர் மீதும் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?