மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள கிராமம் கலாண்ட்வாடி. இந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை 22 வயது வாலிபர் ஒருவர் வழிமறித்து கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு அந்த சிறுமியை கற்பழித்தார். பின்னர் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல டெல்லியில் 17 வயது இளைஞரை அவரது நண்பர்களே குத்தி கொன்றனர்.
டெல்லி சிரகவில் உள்ள மயூர்விகார் பகுதியை சேர்ந்தவர் ரவி. தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் மது அருந்தினார். அப்போது அவர்களுக்குள் சிறிய தகராறு ஏற்பட்டது. 4 பேரும் சேர்ந்து ரவியை பீர் பாட்டிலால் குத்தினார்கள். பின்னர் அவர்கள் கல்லால் அவரது முகத்தை சிதைத்தனர்.
போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி 4 பேரையும் கைது செய்தனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?