ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்ககோரி பாரதிய ஜனதா இளைஞர் அணி சார்பில் கோவை காந்திபுரத்தில் உள்ள தமிழ்நாடு ஓட்டல் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு பாரதிய ஜனதா மாநில செயலாளர் பொன்.ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா அகில இந்திய இளைஞர் அணி தேசிய தலைவர் அனுராக்தீன் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
ஏழை இந்து மாணவர்கள் கல்வி உதவித் தொகை வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி தான் இந்த செயலை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதாவுக்கு செல்வாக்கு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. தற்போது நாடெங்கும் நரேந்திரமோடி அலை வீசுகிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மோடி தான் பிரதமர். அவர் பிரதமராவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அவர் பிரதமரானதும் முதலில் போடும் கையெழுத்து இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதற்கு உரியதாகத் தான் இருக்கும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை கட்சியாக உருவாகி வருகிறது.
மேற்கண்டவாறு பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?