டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் கற்பழிப்பு சம்பவங்கள்
பெருகி விட்டன. பீகாரில் இந்த வாரம் 2 நாட்களில் 2 பெண்களும், ஒரு
சிறுமியும் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
முதலாவது சம்பவம் திங்கட்கிழமை இரவு நடந்தது. அர்வால் மாவட்டம் கிண்டார் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண் கணவர் மீது புகார் கொடுப்பதற்காக கோர்ட்டுக்கு வந்து இருந்தார்.
இரவு 7 மணி ஆகி விட்டதால் வீடு திரும்புவதற்காக காத்து இருந்தார். அப்போது ஒரு மினி பஸ் வந்தது. அதில் 2 டிரைவர்கள் இருந்தனர். அவர்கள் அந்த பெண்ணை வீட்டில் விடுவதாக ஏமாற்றி ஏற்றிச் சென்று ஓடும் பஸ்சில் ஒருவர் மாறி ஒருவர் கற்பழித்தனர்.
அவரது சத்தம் கேட்டு ரோந்து போலீசார் மினி பஸ்சை நிறுத்தினார்கள். உடனே 2 பேரில் உபேந்திரகுமார் என்பவன் தப்பி ஓடிவிட்டான். சிவகுமார் சந்திரவன்ஷி என்பவன் போலீசில் சிக்கினான்.
அதே நாள் இரவில் 14 வயது சிறுமி போஜ்பூர் மாவட்டம் பைத்ராபாத் அருகே கற்பழிக்கப்பட்டாள். அவள் கிராம மக்களுடன் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்று விட்டு வந்து கொண்டு இருந்தாள். மற்றவர்கள் முன்னே சென்று விட்டதால் தனியாக வந்த சிறுமியை சிலர் தூக்கிச் சென்று கற்பழித்தனர்.
இது தொடர்பாக பாபுசிங், பிரமோத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பகவான் என்பவனை தேடி வருகிறார்கள்.
மறுநாள் கோரக்பூர்– முசாபர்பூர் பாசஞ்சர் ரெயில் மேற்கு சம்பரன் மாவட்டம் பகாகா என்ற இடத்தில் நின்றிருந்த போது 2 பேர் ஏறி அதில் பயணம் செய்து வந்த பெண்ணை கற்பழித்தனர். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
தொடர்ந்து நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் பீகார் போலீசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?