Thursday 25 July 2013

கம்ப்யூட்டர் விற்பனை 8 சதவீதம் வளர்ச்சி காணும்

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.

கம்ப்யூட்டர்சந்தையில், "டேப்லெட்' வகை கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி சிறப்பான அளவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இவ்வகை கம்ப்யூட்டர் விற்பனை, 424சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில், 113.10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன் (108.20 லட்சம்) ஒப்பிடுகையில், 5சதவீதம் அதிகமாகும்.

சென்ற நிதியாண்டில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் விற்பனை, 1சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.69 லட்சமாக உயர்ந்துள் ளது. இதன் மூலம் கிடைத்த வருவாய் 13,468 கோடி ரூபாயாக இருந்தது. இவை, இதற்கு முந்தைய நிதியாண்டில், முறையே, 67.12 லட்சம் மற்றும் 13,527 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
மேலும், நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை, 16சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.24 லட்சத்திலிருந்து (ரூ. 10,318 கோடி வருவாய்), 43.08 லட்சமாக (ரூ.11,804 கோடி வருவாய்) உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற நிதியாண்டில், செர்வர் விற்பனை, 2சதவீதம்சரிவடைந்து, 90,699 என்ற எண்ணிக்கையிலிருந்து (ரூ.1,637 கோடி வருவாய்), 89,075 ஆக (ரூ.1,610 கோடி வருவாய்) குறைந்து உள்ளது என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்து உள்ளது.

ஜூலை 25,2013 தினமலர்

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger