மகாவீர் ஜெயினின் அகிம்சை கொள்கையை நாடு முழுவதும் பரப்பிடும் நோக்கத்தில் வசதியான ஜைனர்களில் சிலர், குடும்பத்தை விட்டு பிரிந்து துறவிகளாக சமயப்பணி ஆற்றி வருகின்றனர். செல்வம், இளமை, அழகு இவற்றையெல்லாம் கருத்தில்கொள்ளாமல் ஜைன பெண்களில் சிலரும் குடும்பத்தை பிரிந்து துறவு வாழ்க்கையை மேற்கொள்கின்றனர்.இவ்வகையில் துறவறம் மேற்கொள்ளும் பெண்கள், நாடெங்கிலும் உள்ள ஜைன கோயில்களுக்கு சென்று சேவை மற்றும் உபதேசங்களை செய்து வருகின்றனர்.இதைப் போல், மத்திய பிரதேச மாநிலம், பிந்த் மாவட்டத்தில் சேவை செய்து வந்த இளம்வயது பெண்தறவியை கடந்த வாரம் சில நபர்கள்கடத்திச் சென்று அசோக் தோபி என்பவர் வீட்டில் வைத்து கற்பழித்துள்ளனர்.அந்த காமுகர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அந்த பெண் துறவி நடத்திய போராட்டத்தில் அவருடைய உடலின் 3 இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.அவர் கூறிய அடையாளம்களின்படி அசோக் தோபியை கைது செய்த போலீசார், அவர்மீது ஆள் கடத்தல், கற்பழிப்பு, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருக்கும் மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Bobs Haircuts Images
-
[image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image:
Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs Haircuts][image: Bobs
Haircuts][...
9 years ago
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?