Tuesday, 10 April 2012

இனிமேல் அணு உலை போராட்டம் வலுப்பெற முடியாது ’ போலீசார் குவிப்பு; தயாராக இருக்க உத்தரவு



திருநெல்வேலி: கூடங்குளம் அணுஉலை அமைப்பதற்கு சாதகமான முடிவுகளை மாநில நிபுணர் குழுவின் எடுக்கும் என திட்டவட்டமாக தெரிவதால் போராட்டக்குழுவினர் அடுத்தக்கட்டநிலை குறித்து விவாதித்துவருகின்றனர். இதற்கிடையில் கூடங்குளத்தில் எதற்கும் தயாராக இருக்கும்படியாக அதிக எண்ணிக்கையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கூடங்குளம் அணுமின்நிலையத்த� �ன் பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்த அணுவிஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன், பேராசிரியர்கள் இனியன், அறிவுஒளி, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி விஜயராகவன் ஆகிய மாநில நிபுணர் குழுவினர் நேற்று மாலையில் போராட்ட குழுவின் பிரதிநிதிகளுடன் பேசினர். தங்களுக்கு மாநில அரசு தந்துள்ள இரண்டு பணிகளையும் மேற்கொண்டதாகவும் அணுஉலையின் பாதுகாப்பு அம்சங்கள் சிறப்பாக உள்ளதாகவும், போராட்ட� �்தில் ஈடுபட்டுள்ள மக்களின் அச்சஉணர்வினை பிரதிநிதிகளின் கருத்துக்களின் மூலம் தெரிந்துகொண்டதாகவும் கூறினர். இக்குழுவினர் சென்னை கிளம்பினர். மாநில குழுவினர் விரைவில் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்கள்.

மாநில குழுவினரின் பேச்சுவார்த்தையில் அணுஉலைக்கு சாதகமாக இருப்பதால் விரைவில் மின்உற்பத்தியை துவக்கலாம் என்றே அறிக்கை தரவாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இத� �ால் போராட்டக்குழுவினர் தற்போது அடுத்தக்கட்ட நிலை குறித்து இடிந்தகரையில் பேசிவருகின்றனர். கூடங்குளத்தில் அடிப்படை மற்றும் கண்காணிப்பு பணிகளில் தினமும் 120 ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டுவருகின்றனர். அவர்களில் வெறும் 20 பேர்களை மட்டுமே அனுமதிக்கவேண்டும் எனவும் போராட்டக்குழுவினர் கேட்டனர். அதற்கும் அரசு தரப்பில் அனுமதிக்கவில்லை. எனவே போராட்டக்காரர்கள் அணுஉலை பணிய� ��ளர்களை உள்ளே செல்லவிடாமல் தடுக்க நேரிடலாம் என்ற நிலை உள்ளது.

இதுவரையிலும் சுமார் 100 போலீசார் மட்டுமே பாதுகாப்பிற்கு இருந்த கூடங்குளம் அணுஉலை பகுதியில் இன்று காலையில் 800 போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். டி.ஐ.ஜி.,வரதராஜூ, எஸ்.பி.,விஜயேந்திர பிதரி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டு எதற்கும் தயார் நிலையில் உள்ளனர்.

மாநில அரசின் நில� � மாறுகிறது: மாநில அரசின் நிபுணர்குழு கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பில் பிரச்னை இல்லை என்றும் இது திருப்திகரமாக உள்ளது என்றும் கூறியிருப்பதால், இது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மாநில அரசு போராட்டக்காரர்களுக்கு எதிராக களம் இறங்கும் போது தொடர்ந்து போராட்டம் நடத்துவதில் சிரமம் ஏற்படும். போலீசின் கெடுபிடிகள் அதிகரிக்கும். இதனா ல் அடுத்து என்ன செய்வது என போராடக்காரர்கள் முடிவு எடுக்க முடியாமல் திகைத்து வருகின்றனர்.

3 நாள் உண்ணாவிரதம் அறிவிப்பு: இதற்கிடையில் அணுஉலையை மூடக்கோரி 3 நாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக உதயக்குமமார் இன்று இடி� ��்தகரையில் தெரிவித்துள்ளார். மாநில குழுவிர் தங்கள் தரப்பில் இருந்த நிபுணர் குழுவை சந்திக்கவில்லை என்று குறைப்பட்டார்


http://devadiyal.blogspot.com

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger