கடந்த சில ஆண்டுகளாக செய்திகள் / வதந்திகளில் அதிகம் அடிபட்டவர் இந்தியாவிலேயே நயன்தாரா ஒருவராகத்தான் இருக்க முடியும். அவரைப்பற்றிய செய்திகளில் இன்னும் ஒன்றாக இதைச் சேர்த்துக் கொள்ளுங்கள்!
நயன்தாரா பிறப்பால் கிறிஸ்தவர். இடையில் தன் மனம் கவர்ந்த பிரபு தேவாவுக்காக அய்யர் வைத்து மந்திரம் முழங்க இந்து மதத்துக்கு மாறிவிட்டார். இப்போது பிரபு தேவாவைப் பிரிந்த நயன், மீண்டும் ஈஸ்டர் கொண்டாட ஆரம்பித்துள்ளார்.
நேற்று ஈஸ்டருக்காக ஹைதராபாதில் தனக்கு நெருக்கமான நடிகர் நடிகைகள் நண்பர்களை மட்டும் வரவழைத்து பெரிய பார்ட்டி ஒன்றைக் கொடுத்தாராம்.
நயன்தாரா கூறுகையில்……
"வழக்கமாக ஈஸ்டர் தினத்தில் அம்மாவின் சமையலை ஒரு பிடிபிடிப்பேன். ஆனால் இந்த முறை ஷூட்டிங்கில் இருந்தேன். ஹோட்டல் சாப்பாடுதான். ஆனால் ஈஸ்டருக்கு ஸ்பெஷலாக இருந்தது
நேற்று மாலை நண்பர்களுடன் சந்தோஷமாக ஈஸ்டர் மகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?