பிரசவ வலியால் துடித்த இளம்பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், ஜீப்பில் குழந்தை பெற்ற துயர சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாக்பாத் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்ரம். இவரது மனைவி நீலம். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். பிரசவ வலியால் துடித்த அவரை, பாக்பாத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு விக்ரம் நேற்று அழைத்து சென்றார்.
ஆனால், அங்கிருந்த டாக்டர்கள் சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்டுள்ளனர். அவரிடம் பணம் இல்லாததால், மருத்துவமனையில் கர்ப்பிணியை அனுமதிக்கவில்லை.
கெஞ்சிப் பார்த்தும் முடியாததால் வேறு வழி இல்லாமல் வேறு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து செல்ல முடிவு செய்தார். மனைவியை ஜீப்பில் ஏற்றிய சிறிது நேரத்தில் அவருக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து கேள்விப்பட்ட முதன்மை மருத்துவ அதிகாரி ஜே.பி.சர்மா, மருத்துவமனையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?