மேலும் படங்கள் |
சமீபத்தில் தனக்கு நேர்ந்த ஒரு சமாச்சாரத்தைக் கேள்விப்பட்டு இதே மாதிரி கேட்டு அதிர்ந்தவர் நடிகை இனியா!
அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீருக்கு ஜோடியாக ஒப்பந்தமானவர் நடிகை இனியா. ரவிக்கை போடாமல், கொசுவம் வைத்த சேலை கட்டி முதல் கட்டப் படப்பிடிப்பில் கூட பங்கேற்றுவிட்டு வந்தார்.
இந்த நிலையில் பாரதி ராஜா அமீர் இடையில் பிரச்சினை உண்டாகி, அமீரே படத்தில் இல்லை என்றாகிப் போனது.
அமீர் - இனியா பகுதிகளை ஸ்க்ரிப்டிலிருந்தே தூக்கிவிட்ட பாரதிராஜா, இப்போது கார்த்திகா மற்றும் அவருக்கு ஜோடியாக வரும் புதுமுக நடிகர் தொடர்பான காட்சிகளை மட்டும் படமாக்கி வருகிறார்.
அமீரே இல்லை என்றான பிறகு, இனியா மட்டும் படத்தில் இருப்பாரா என்ன... அவரும் தூக்கப்பட்டுவிட்டார்.
இந்த விஷயம் அவருக்கு இப்போதுதான் தெரியுமாம். தகவல் கேள்விப்பட்டதும் அவர் கேட்டது... 'என்னது பாரதிராஜா சார் படத்துல நான் இல்லையா?!'
இதுக்குதான் தமிழ் பத்திரிகை படிக்கணும்ங்கறது!
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?