இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட டிராவிட் தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். டெஸ்ட் போட்டி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் டிராவிட்.
இக்கட்டான போட்டிகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியைக் காக்கும் டிராவிட், எதிரணிகளுக்கு சோதனை அளிப்பதில் கெட்டிக்காரர். 39 வயதான டிராவிட் ஓய்வு பெறுவது, இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என நட்சத்திர வீரர் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
இதுபற்றி சச்சின் கூறும்போது:-
'டிராவிட்டுடன் விளையாடியது சிறந்த அனுபவம். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. என்னைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு டிராவிட்தான். அவருக்கு யாரும் மாற்று கிடையாது. வீரர்கள் ஓய்வு அறையிலும், மைதானத்திலும் நான் டிராவிட்டை மிகவும் இழப்பதாக உணர்கிறேன்' என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?