Thursday 23 February 2012

உலகின் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசி- நொக்கியா அறிமுகம்!

 

மொபைல் வேள்ட் காங்கிரஸ் (Mobile World Congress) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய கையடக்கத்தொலைபேசி தயாரிப்பு நிறுவனங்கள், வலையமைப்பு வழங்குநர்கள்,விற்பனையாளர்கள் மற்றும் பிற தொழில்நுட்ப வழங்குநர்கள் பங்குபற்றும் கண்காட்சி ஸ்பெயினில் இம்மாதம் நடைபெறவுள்ளது.

இதில் காட்சிப்படுத்துவதற்காக பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளைத் தயார்ப்படுத்தி வைத்துள்ளன.

அவ்வாறு காட்சிப்படுத்தவுள்ள கையடக்கத்தொலைபேசிகள் தொடர்பான அறிவிப்புகளையும் அந் நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் நொக்கியா நிறுவனம் இதுவரை வெளியானதில் மிகச் சிறந்த கெமராவைக் கொண்ட கையடக்கத்தொலைபேசியை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இக் கையடக்கத்தொலைபேசியின் கெமராவைப் பற்றிய காணொளியொன்றினை நொக்கியா தற்போது வெளியிட்டுள்ளது.

Click here to view the embedded video.

இம்மாதிரியின் பெயர் நொக்கியா N808 PureView என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் நொக்கியா இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் மேற்கொள்ளவில்லை.

எனினும் இம் மாதிரியானது விண்டோஸ் மூலம் இயங்காது எனவும், 'நொக்கியா பெலி' இயங்குதளத்தின் மூலமே இயங்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நொக்கியா விண்டோஸின் கூட்டணி அமைத்ததன் பின்னர் அதன் சிம்பியன், பெலி, எனா போன்ற இயங்குதளங்களில் பெரிதும் அக்கறை செலுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் 'நொக்கியா N808 PureView ' பெலி இயங்குதளத்தினையே பயன்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நொக்கியா மாத்திரமன்றி மற்றைய நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளைக் காட்சிக்கு வைப்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளன.

குறிப்பாக எல்.ஜி. நிறுவனம் குவாட் கோர் புரசசரைக் கொண்ட எல்.ஜி. இன் ஒப்டிமஸ் 4X HD என்ற கையடக்கத்தொலைபேசியினை இங்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போது சந்தையில் நன்கு விற்பனையாகிக்கொண்டிருக்கும் செம்சுங்கின் கெலக்ஸி வரிசை கையடக்கத்தொலைபேசிகளுக்கு தகுந்த போட்டியளிக்கும் வகையில் எல்.ஜி. பல மாதிரிகளை அறிமுகப்படுத்தவுள்ளது.

அவற்றில் ஒன்றே இதுவாகும்.

இது 4.7 அங்குல, 1280 x 800 ரிஸலுஸனுடன் IPS திரையைக்கொண்டது.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் Nvidia Tegra 3 1.5GHz குவாட் கோர் புரசசராகும்.

இதைத்தவிர 1 ஜி.பி. ரெம், 8 மெகாபிக்ஸல் கெமரா, 16 ஜிபி உள்ளக நினைவகத்தினைக் கொண்டதாகும்.

இந் நிறுவனங்களைப் போல பல நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தவுள்ளன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம் என்னென்ன புதிய தயாரிப்புகள் வெளியாகின்றன என!

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger