'மங்காத்தா' வெற்றியை தொடர்ந்து வெங்கட்பிரபு அடுத்து சூர்யாவை வைத்து இயக்கும் புதிய படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றன.
இதுபற்றி வெங்கட்பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது:
"தற்போது சூர்யா நடிக்கும் புது படத்தை இயக்குகிறேன். இதற்கான ஸ்கிரிப்ட் இப்போதுதான் முடிந்தது. இந்த படத்தை ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக எடுக்க முடிவெடுத்திருக்கிறோம். சூர்யாவுடன், தெலுங்கு நடிகர் ரவி தேஜாவும் காமெடி காட்சிகளில் நடிக்க உள்ளனர். இருவரும் வெவ்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருவதால், அந்த படங்களை முடித்தவுடன் இப்படத்தில் நடிப்பார்கள். சோனம் கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் முன்னணி நடிகை ஒருவர் நடிக்கிறார். 7ம் அறிவு படத்துக்கு ஸ்ருதி, சூர்யாவுடன் நடிப்பதாக வந்த தகவல் உண்மையல்ல. வெறும் வதந்தி தான்" என்று கூறினார்.
சமீபத்தில் அஜீத்தை சந்தித்து, சினிமா தவிர பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம். மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசையாக இருக்கிறேன். அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பாக இணைந்து பணியாற்றுவோம் என்று கூறினார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?