சென்னையில் ஐந்து வங்கிக் கொள்ளையர்களை போலீஸார் போட்டுத் தள்ளிக் கொண்டிருந்த நேரத்தில் மதுரையில் ஒரு வங்கிக் கிளையில் கொள்ளையடிக்க ஒரு கும்பல் முயன்றுள்ளது தெரிய வந்துள்ளது.
சென்னையில் 2 வங்கிகளில் துணிகரமாக கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த 5 பேரை இன்று அதிகாலையில் போலீஸார் என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் மதுரையில் பாங்க் ஆப் பரோடா கிளையில் கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது இன்று காலை தெரிய வந்துள்ளது.
கிட்டத்தட்ட சென்னையில் கொள்ளையர்கள் ஐவர் சுட்டு வீழ்த்தப்பட்ட சமயத்தில் மதுரையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எஸ்.எஸ்.காலனியில் பாங்க் ஆப் பரோடா கிளை உள்ளது. இந்தக் கிளைக்குள் புகுந்து சிலர் கொள்ளையடிக்க நள்ளிரவு வாக்கில் முயன்றுள்ளனர். ஆனால் உள்ளே புக முடியாமல் போனதால் அவர்கள் திரும்பிச் சென்றுள்ளது இன்று காலை தெரிய வந்தது.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?