கன்னட திரையுலக பாலிடிக்ஸ் தன்னை ஆன்மீகத்துக்கு தாவ வைத்துவிட்டது என்கிறார் பிரபல கன்னட நடிகை நிகிதா.தமிழில் வெற்றிவேல் சக்திவேல், சரோஜா, முரண் உள்ளிட்ட படங்களிலும் ஏராளமான கன்னடப் படங்களிலும் நடித்துள்ளார் நிகிதா.கன்னட நடிகர் தர்ஷனுக்கும் நிகிதாவுக்கும் தகாத உறவு இருந்ததாகவும் இதனால் முதல் மனைவியை தர்ஷன் சித்ரவதை செய்து அடித்து விரட்டியதாகவும் செய்தி வெளியாயின. இது குறித்து போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து நிகிதா சினிமாவில் நடிக்க கன்னட தயாரிப்பாளர் சங்கம் தடைவிதித்தது. தடையை நீக்கும்படி நடிகர்கள் உள்ளிட்ட பலர் வற்புறுத்தினர். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா தலையிட்ட பிறகே அத்தடை விலக்கி கொள்ளப்பட்டது. இந்த சர்ச்சைகள் நிகிதாவை விரக்தியடையச் செய்து, ஆன்மீகத்தின் பக்கம் தள்ளிவிட்டன.
தனது ஆன்மீக ஈடுபாடு குறித்து நிகிதா கூறுகையில், "எனக்கு கன்னட தயாரிப்பாளர் சங்கம் நடிக்க தடை விதித்தது நாடு முழுக்க எதிரொலித்தது. உழைக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் இது போன்ற பிரச்சினைகள் சந்தித்துதான் ஆக வேண்டும்.
இந்த சினிமா அரசியலே வேண்டாம் என்றுதான் நான் ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுகிறேன். இதனால் மனம் தெளிவாகவும் பலமாகவும் ஆகிவிட்டது.
இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கு பக்குவப்பட்டுவிட்டேன். இனி முழு கவனமும் சினிமாவில்தான். சிறந்த நடிகை என்ற பெயர் எடுக் முழு மூச்சாக பாடுபடுவேன்," என்றார்.
முன்னர் அறிவித்த திருமணம் குறித்து கேட்டபோது, "என் தந்தை இறந்த சில மாதங்கள்தான் ஆகின்றன. எனவே திருமணம் குறித்து இப்போது யோசிக்கவில்லை," என்றார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?