தமிழ் மற்றும் தெலுங்கு என இரு திரையுலகிலும் முன்னணி நடிகர்களின் படங்களின் நாயகியாக நடித்து வருபவர் காஜல் அகர்வால்.தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் வெளிவந்த 'பிஸினஸ்மேன்' படத்தில் நாயகியாக நடித்தார். அப்படம் வரவேற்பை பெற்றது.
தமிழில் விஜய்யுடன் 'துப்பாக்கி', சூர்யாவுடன் 'மாற்றான்' என இரு முன்னணி நாயகர்களின் படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார். இவ்விரண்டு படங்களுக்குமே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தி திரையுலகில் தமிழில் வெளியான 'சிங்கம்' படத்தின் ரீமேக்கில் அஜய் தேவ்கானின் ஜோடியாக நடித்தார். அப்படம் நூறு கோடிக்கு மேல் வசூல் ஆனது. தற்போது இந்தியில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் காஜல்.
இந்தியில் முன்னணி இயக்குனரான நிரஜ் பாண்டே ( 'A WEDNESDAY' இயக்குனர் ) இயக்க இருக்கும் 'SPECIAL CHABBIS' என்னும் படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தமிழ், தெலுங்கு திரையுலகினை தொடர்ந்து இந்தியிலும் முன்னணி நாயகர்களின் படங்களின் வாய்ப்புகள் வருவதால் சந்தோஷத்தில் சிக்கி தவிக்கிறாராம் காஜல்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?