Wednesday, 29 February 2012

பண பரிமாற்றம்.

 
 
 
2 ஜி வழக்கின் பெரும்பாலான பணபரிமாற்றம் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மூலம் நடைபெற்றதாக பரபரப்பு குற்றம் சாட்டிய சுப்பிரமணியசாமி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகள் பட்டியலையும் வெளியிட்டார். இதுபற்றி செய்தியாளர்களிடம் சுப்பிரமணியசாமி கூறியதாவது 2 ஜி வழக்கு விசாரணையில் தி.மு.க வை சேர்ந்த அமைச்சர் பழனி மாணிக்கம் தலையிடுகிறார். இவர் தலையீடு குறித்து சிபிஐ மத்திய விஜிலன்ஸ் கமிட்டியிடம் புகார் அளித்துள்ளது.2 ஜி சம்பந்தமாக தமிழ்நாடு குற்றவாளிகளின் சொத்து பற்றி கணக்கெடுப்பு பற்றி திருச்சியை சேர்ந்த ஆல்பர்ட் மனோகரன் என்பவரை நியமித்துள்ளனர்.ஆனால் இதுபற்றி எந்த விசாரணையும் இதுவரை நடைபெறவில்லை இதுபற்றி விசாரணைக்கு இடையூராக இருக்கும் மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கத்தை நீக்க வேண்டும் அல்லது வேறு துறைக்கு மாற்ற வேண்டும் என்று பிரதமருக்கு தான் கடிதம் எழுதியதாக தெரிவித்தார்.மேலும் கூடங்குளம் அணுஉலை விவகாரத்தில் வெளிநாட்டு சக்திகள் உதவி வருகின்றனர் என்றும் இதுபற்றி தான் கூறிய கருத்தையே பிரதமர் மன்மோகன் சிங்கும் தற்போது கூறியுள்ளார். கிளர்ச்சியாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்படாததால் கூடுதல் மின் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சி நடத்தும் அமைப்புகளுக்கு எதிராக மத்திய முதன்மை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்) ரூ2100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும். இவ்வாறு சுப்பிரமணியசாமி கூறினார். மேலும் 2 ஜி வழக்கில் சிதம்பரத்தை தாம் விடப்போவதில்லை என்றும் மேலும் பல ஆதாரங்களை வரும் மார்ச் 16 அன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகவும் கூறினார்.டில்லி உயர்நீதிமன்றத்தில் தனது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி தனது தீர்ப்பில் 70 பத்திகளில் 68 பத்திகளை தனக்கு ஆதரவாக எழுதிவிட்டு 2 பத்திகளை சிதம்பரத்திற்கு ஆதரவாக எழுதியுள்ளார்.என்னுடைய வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிதம்பரம் 2ஜி வழக்கில் ராசாவுடன் ஈடுபாடு உண்டு நான் கூறிய ஆதாரங்களை நீதிபதி உண்மை என்று கூறிவிட்டு சிதம்பரம் கிரிமினல் மனப்பான்மையோடு செயல்படவில்லை என்று கூறி ரத்து செய்தது ஏற்புடையதல்ல.
 
ஊழல் விவகாரத்தில் பதவியை துஷ்பிரயோகம் செய்தால் மட்டும் போதாது கிரிமினல் மனப்பானமையோடு செயல்பட்டாரா இல்லையா என்பதை வழக்கு விசாரணை தான் முடிவு செய்ய வேண்டும்.சிதம்பரம் கார்த்தி சிதம்பரம் மூலம் தான் எல்லா பணப் பரிமாற்றங்களும் நடந்தது 12 கம்பெனி மூலமாக அவர் எல்லா பணத்தையும் முதலீடு செய்துள்ளார். சிதம்பரம் கர்நாடகத்தில் உள்ள 25 சதவிகித இடங்களுக்கு முதலாளி. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தையும் குற்றவாளிகளை சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.என்று கூறி கார்த்தி சிதம்பரம் சேர்மனாக உள்ள 12 கம்பெனிகளின் பெயர் பட்டியலையும் சுப்பிரமணியசாமி வெளியிட்டார்.12 கம்பெனிகளுக்கும் கார்த்தி சிதம்பரம் சேர்மனாக இருப்பதாக கூறினார். அதில் 2 கம்பெனிகளுக்கு 2ஜி பணம் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை பற்றி விரைவில் ஆதாரத்தோடு வெளியிடுவேன் என்று கூறினார்.
காய்மக்கடு எஸ்டேட் லிமிடெட், கபாலீஸ்வரர் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட் ஆகியவை கார்த்தியின் சில கம்பெனிகள் ஆகும்.
========================================================================
இவர்களுக்கு எதற்கு இவை எல்லாம்?
====================================
 
இந்தியாவின் மூன்றாம் நிலை அணுமின் நிலையத் திட்டத்தை முறியடிக்கவே கூடங்குளம் அணுமின் எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது என இந்திய உயர் அணுமின் திட்ட நிபுணர்கூறியுள்ளார்.


ஹைதராபாத்தில் அணு எரிபொருள் தரக்கட்டுப் பாடு வகை குறித்த மாநாடு திங்களன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய அணுமின் கழக நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி ஆணையத் தலைவர் (ஏஇசி) ஸ்ரீகுமார் பானர்ஜி செய்தியாளர்களி டம் கூறுகையில், அணுமின் நிலையம் தொடர்பான பாதுகாப்பு, தரம், சுகாதா ரம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த போதும் எரி பொருள் மறுசுழற்சி குறித்து கேள்வி எழுப்பு கிறார்கள் என்றனர்.

டாக்டர் ஜெயின் பேசும்போது", கூடங்குளம் அணு மின்நிலையக் கட்டுமானம் 2002ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முதல் உள்ளூர் மக்கள் ஒற்றுமையுடன், சுமூகமாக கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் புகு ஷிமா (ஜப்பான்) அணுமின் நிலைய விபத்து குறித்து எழுந்த அச்சம் குறித்து கூடங்குளம் மக்களுக்கு விளக்கப்பட்டு சுமூகநிலை ஏற்பட்டது. ஆறு மாதத் திற்கு பின்னர் செப்டம்பர் மாதம் மீண்டும் புகுஷிமாபற்றிய பய உண்ரவு யாரால்அங்கு மக்களிடையேபுகுத்தப்பட்டு தலைதூக் கியது எப்படி?


அணுமின்நிலைய பாது காப்பு குறித்து துவங்கிய போராட்டம், தற்போது அணு மின்நிலையமே தேவை யில்லை என்கிற தீவிரவாதத் துடன் நடக்கிறது .

இப்போது போராட்டக்காரர்கள் அணுமின் நிலைய பாது காப்பு குறித்து கேட்கப்பட வில்லை. அணுமின் திட்டத் தில் மறுசுழற்சி மற்றும் இரண்டாவது நிலை குறித்தே உள்ள. அதிவேக ஈனூலைக்கு புளூட்டோனி யம் எங்கே தயாரிக்கப்ப டும்? என கேள்விக் கேட் கிறார்கள்.அணு உலை இயக்க,அணு உலை கட்டமைப்பு வரைபடங்கள் கேட்கிறார்கள்.இது அணு உலை பற்றி தெரியாத நிபுணர்களுக்கே குளப்பம்தரும் வரைபடங்கள்.நாட்டின் ரகசிய ஆவண்ங்கள்.அது இவர்களுக்கு எதற்கு?




இது இந்திய அணுமின் திட்டத்தின் மீதான தாக்குதல்.சாதாரண மக்கள் இப்படி அறிவியல் பூர்வமாகக் கேட்கமாட்டார்கள்.உள்நாட்டு ரகசியங்களை இப்படிகேட்பது எதற்காக யாருக்காக என்ற கேள்விகள் எழும்புகிறது.அதனால்தான் அந்நிய நாட்டின் கைகள் இந்த போராட்டத்தின் ப்ன்னணியில் இருப்பதாக உணரப்படுகிறது. அணு தொழில்நுட்பத்தில் உலகின் தலைமையாக, தோரியம் அணு உலை திட்டத்திற்குச் செல்ல விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கூடங்குளத்தில் மறு சுழற்சி ஆலை இல்லை. இந்த நிலையில், மறுசுழற்சி பற்றி கேள்வி எழுப்புவது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 2032ம் ஆண்டு காலகட்டத்தில் இந்திய அணுமின் உற்பத்தியை 63 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு உள்ளது. இதில் இறக்குமதி செய்யப் படும் அணு உலைகள் மூலம் 35 ஆயிரம் - 40 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட உள்ளது என ஜெயின் கூறினார்.
--------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger