Thursday, 9 February 2012

ஐஐஎம் மாணவர்களுக்கு 'கொலவெறி' லெக்சர் கொடுத்த தனுஷ்!

 
 
 
நடிகர் தனுஷ் தான் பாடிய 'கொலவெறி' பாடலின் வெற்றி குறித்து ஐஐஎம் அகமதாபாத் மாணவர்களிடையே உரை நிகழ்த்தினார்.
 
3 படத்தில் தனுஷ் பாடிய 'ஒய் திஸ் கொலவெறி, கொலவெறி டி' பாடல் உலகப் புகழ்பெற்றுள்ளது. இதனால் அவரது புகழின் உச்சிக்கே சென்றுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் கூட தனது வீட்டிற்கு விருந்துக்கு வருமாறு தனுஷை அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கொலவெறி பாடலின் புகழ் குறித்து அவர் இந்தியாவின் தலைசிறந்த பிசினஸ் ஸ்கூலான ஐஐஎம் அகமதாபாத்தில் உரை நிகழ்த்தினார்.
 
அங்கு திரைப்படத் துறை குறித்த படிப்பு படிக்கும் 150 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனுஷிடம் கேள்விகள் கேட்டனர்.
 
பின்னர் அவர் டுவிட்டரில், ''ஐஐஎம் அகமதாபாத் மிகவும் அழகாக உள்ளது. அங்குள்ளவர்களும் சரி, இடமும் சரி. மாணவர்கள் நல்ல கேள்விகளைக் கேட்டனர். அருமையான அனுபவம்'' என்று கூறியிருக்கிறார்.
 
உரை நிகழ்த்தும் முன்பு அவர் டுவிட்டரில் கூறுகையில், ''ஐஐஎம் அகமதாபாத்தில் நாளை உரை நிகழ்த்த தயாராகிக் கொண்டிருக்கிறேன். எனக்கு அவ்வளவு நன்றாக ஆங்கிலம் பேச வராது. ஆனால் அதையெல்லாம் யார் கண்டார். நான் இந்தியன், ஆங்கிலேயன் அல்ல. ஹி...ஹி...ஹி.. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger