Thursday 9 February 2012

மளிகை கடையில் திருடிய தே.மு.தி.க நிர்வாகிக்கு கட்டிவைத்து அடி உதை

 
 
 
சேலம் மாவட்டம், ஆத்தூர் பக்கத்தில் உள்ளது பைத்தூர் என்ற கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் உள்ள வீடுகளின் முன்பாக வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், ஆட்டுக்குட்டிகள், கோழி போன்றவைகளும் தோட்டங்களில் இருக்கும் மின் மோட்டார்களும் அடிக்கடி காணமல் போய்க்கொண்டிருந்தன.
 
இந்த திருட்டு கும்பலை பிடிக்க முடிவு செய்த கிராமத்து மக்கள் உள்ளூரில் உள்ள இளைஞர்களை ஓன்று திரட்டி பாதுகாப்பு குழு ஒன்றை அமைத்தனர். இந்த குழுவினர் இரவு நேரங்களில் கிராமத்தின் முக்கியமான இடங்களில் எல்லாம் மறைந்திருந்து கண்காணித்து வந்தனர்.
 
 
கடந்த 7ஆம் தேதி இரவு பைத்தூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ள கிருஸ்ன மோகன் என்பவரின் கடையின் கூரையை பிரித்துக்கொண்டு நான்கு பேர் கடைக்குள் இறங்குவதை பாதுகாப்புக்கு மறைந்திருந்த ஒருவர் கவனித்து விட்டார்.
 
 
தனி ஆளாக நின்று திருடர்களுடன் சண்டை போடமுடியாது என்று முடிவு செய்த அந்த பாதுகாப்பு குழுவை சேர்ந்த நபர். அந்த கிராமத்தின் மற்ற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் தனது சகாக்களுக்கு குறுந்தகவல் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
 
 
பத்து நிமிடங்களில் இருபதுக்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் அந்த இடத்துக்கு வ்ந்து விட்டனர். கடைக்குள் இறங்கிய திருடர்கள் வெளியே வரும் வழியில் காத்திருந்தனர்.
 
 
பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகை மற்றும் உணவுப்பொருட்களை திருடிக்கொண்டு கடையை விட்டு வெளியே வந்த நான்கு போரையும் பிடித்து அடித்து உதைத்து மின்கம்பத்தில் கட்டிப்போட்டனர்.
 
 
இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்த குமார் (வயது 30) மணிகண்டன் (21) சிவா (18), பன்னீர் (18) என்பது தெரிய வந்தது. இந்த திருட்டு விவகாரங்களில் முக்கிய பக்குகொண்டிருந்த குமார் பைத்தூர் கிளை தே.மு.தி.க பொருளாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
பகலிலேயே பொது மக்களின் சொத்தை கொல்லையடிப்பது தான் அரசியல்வாதிகளின் தொழில் என்பது தே.மு.தி.க.வில் இருக்கும் குமாருக்கு தெரியவில்லை.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger