'பெருமான்' என்றொரு படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. இப்படத்தின் சப் டைட்டில் 'தி ரஜினிகாந்த்'. ஒரு ரஜினி ரசிகனின் கதை தானாம் இது. கதையை பற்றி செய்தி யாளர்கள் கேட்ட போது இந்த ஒரு விஷயத்தை தவிர அதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்ல மாட்டேன் என்று அடம் பிடித்த படத்தின் டைரக்டர் ராஜேஷ் கன்னாவுக்கு ரஜினி தரப்பிலிருந்து வந்திருக்கும் ஒரு வேண்டுகோள், சரியான பிரம்படியாக இருந்திருக்கும். தலைப்பில் தன் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று கூறி விட்டார் ரஜினி. தனது ரசிகர் மன்ற தலைவரும், செய்தி தொடர்பாளருமான சுதாகர் மூலம் இத்தகவலை ராஜேஷ் கன்னாவுக்கு தெரிவித்திருக்கிறார் அவர்.
சுதாகர் கூறுகையில், "பெருமான் என்றால் அனைத்துக்கும் மேலான இறைவனைக் குறிக்கும். இறைவனை விட மேலானவர் ஒருவர் இல்லை என்பதை நம்புகிறவர் ரஜினி சார். இந்தத் தலைப்பை அனுமதித்தால் அது தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் என்பதால், நீக்கும்படி கேட்டுக் கொண்டார்" என்றார்.
இந்த கதைக்காக இரண்டு வருடங்கள் உழைத்த டைரக்டர் இப்படி ஒரு தலைப்பை வைக்க முடிவெடுத்த உடனேயே ரஜினியை நேரில் சந்தித்து தலைப்புக்கு அனுமதியும் வாங்கியிருந்தாராம். முதலில் தயங்கிய ரஜினி, முழு கதையையும் கேட்டவுடன் ஓ.கே என்று பச்சை கொடியும் காட்டினாராம். இனிமேல் மறுப்பதற்கு எதுவும் இல்லை என்ற டைரக்டரின் நம்பிக்கையில்தான் இப்படி ஒரு இடியை இறக்கியிருக்கிறார் ரஜினி.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?