பல மாதங்கள் சிறையிலிருந்த பின், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள கனிமொழியை திமுகவினர் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வரவேற்றுள்ளனர். இது முக்கியத்துவம் வாய்ந்ததாக நான் கருதவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், திமுகவைச் சேர்ந்த ஒருவர் (கனிமொழி) பல மாதங்கள் சிறையிலிருந்த பின், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை அக்கட்சியினர் மிகப் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்து வரவேற்றுள்ளனர். இதில் முக்கியத்துவம் இருப்பது போல எனக்குத் தெரியவில்லை.
ஸ்டாலின் மீது வீடு அபகரிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் அவர் நிரபராதியா, இல்லையா என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உடனடியாக மின் உற்பத்தியை துவக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சனையில் தமிழக அரசு மெளனம் சாதிப்பது சரியல்ல.
தற்போது யூனிட்டிற்கு 4 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை விலை கொடுத்து வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் விரைந்து மின் உற்பத்தி துவக்கப்பட்டால், ஒரு யூனிட் 2 ரூபாய் 35 காசுகள் வீதம், தமிழகத்திற்கு கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே, இங்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியமே இருக்காது என்றார்.
இந் நிலையில் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவன் வந்த இளங்கோவன், தமிழக காங்கிரஸ் தலைவராகியுள்ள ஞானதேசிகனை சந்தித்தார். பின்னர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு ஆதரவாக சைதாப்பேட்டையில் இன்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நான், காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் கலந்து கொள்கிறோம்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தியை விரைந்து தொடங்க வேண்டும்.
தமிழக அரசு அணுமின் நிலையத்துக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெற்றது தவறு.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பை கேட்கும் முதல்வர் ஜெயலலிதா கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் தமிழக போலீசாரின் முழு பாதுகாப்பை வழங்க வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படவிடாமல் தடுக்கும் சக்திகள் யாரால் தூண்டிவிடப்படுகிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது தேசவிரோத சக்திகள் என்ற முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டக்காரர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்பதை மத்திய அரசு விரைவில் கண்டு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
முல்லை பெரியாறு விஷயத்தில் கேரள காங்கிரசும், தமிழக காங்கிரசும் மாறுபட்டு இருப்பது இயற்கை தான். கேரளாவுக்கு எது தேவை என்று நினைக்கிறார்களோ அதற்காக கேரள காங்கிரஸ் போராடுவதும், தமிழ்நாட்டுக்கு எது தேவை என்று நினைக்கிறார்களோ அதற்காக தமிழக காங்கிரசர் போராடுவதும் தவறில்லை.
ஆனால் கேரள இளைஞர் காங்கிரசார் வன்முறையில் ஈடுபட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார்.
http://actressmasaala.blogspot.com
http://sex-story7.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?