சினேகாவுக்கும், பிரசன்னாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதனை பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இது குறித்து அவர் கூறும்போது, அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்தபோது இருவருக்கும் தொழில் ரீதியான நட்பு இருந்தது. அதன் பிறகு சினேகா நடவடிக்கைகளில் ஈர்ப்பானேன். அவர் பெரிய நடிகை ஆனாலும் தலைக்கனமோ, பந்தாவோ இல்லாமல் பழகினார். அந்த குணங்கள் எனக்கு பிடித்தது.
மூன்றரை வருடங்கள் எங்களுக்குள் காதல் இருந்தது. அவசரப்படாமல் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள கால அவகாசம் எடுத்தோம். நிறைய யோசித்தோம். இறுதியில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். இரு வீட்டு குடும்பத்தினரும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டனர். திருமணம் மற்றும் நிச்சயதார்த்த தேதிகளை அவர்கள் முடிவு செய்வார்கள் என்றார்.
திருமணம் குறித்து சினேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.
திருமணம் எப்போது என்று அவரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம் என்றார். ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க சினேகா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படம் முடிந்ததும் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?