இயக்கம் : சமுத்திர கணி
தயாரிப்பு : சசிகுமார்
ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.
ஒரு அபார்ட் மென்டுக்கு சசிகுமாரும் ,அல்லரி நரேஷும் குடி வருகிறார்கள் ,அங்கே இருபவர்களுகெல்லாம் உதவி செய்து நல்ல பெயரை பெறுகிறார்கள் ,ஆனால் அங்கே இருபவர்களுகேல்லாம் அதிர்ச்சியான செய்தி ஒன்று வருகிறது ,கிரமத்தி சசி யும் நரேஷும் மன நிலை தவறியவர்கள் என்று ,ஏன் அப்படி ஆனார்கள் ,அவர்களுடைய கதை என்ன என்பதை முடித்தவரை சுவாரசியமாக கொடுத்திருகிறார் சமுத்திரகனி ,தெலுங்கு நடிகராக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார் நரேஷ்.
சசிக்குமார் மிகச்சரியாக பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இயல்பாக நடிக்கிறார். தன்னம்பிக்கையுடன் கூடிய கதாபாத்திரம். சில நாட்களாக மனம் சரியில்லாமல் இருந்த எனக்கு அந்த கதாபாத்திரம் தான் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது.
நரேஷ் துடிப்பாகவும் நகைச்சுவையுடனும் நடித்துள்ளார். நாக்கை கடித்துக் கொள்ளும் போது கண்கலங்க வைக்கிறார். காதலுக்காக அவர் முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை வரவழைக்கிறது. கவிதை சொல்லும் போது இரண்டு புள்ளி ஒரு ஆச்சரியக்குறியுடன் நம் மனதில் அமர்ந்து கொள்கிறார்.,தெலுங்கு உரிமையை நரேஷ் வங்கி இருபதாக தகவல்
சுவாதி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரையில் தோன்றுகிறார். பார்க்க அட்டகாசமாக உள்ளார்.
கஞ்சா கருப்பு ,பரோட்டா சூரி தங்களுக்கு கொடுத்த வேலையை நன்றாக செய்திருக்கிறார்கள்
போராளி - வெல்வான்
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?