Subject: நடிகரின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து!
குடிபோதையில் வாகனம் ஓட்டிய நடிகர் நிகிலின் டிரைவிங் லைசென்சை ஓராண்டுக்கு ரத்து செய்து கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஹேப்பி டேஸ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் நிகில். கடந்த வெள்ளிக்கிழமை ஐதராபாத்தில் தனது நண்பர்களுடன் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்ட அவர், நள்ளிரவில் வீடு திரும்பினார். பஞ்சரா ஹில்ஸ் அருகே போக்குவரத்து போலீசார் அவரது காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
நிகில் போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதுதொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து நிகில் கூறுகையில், சக நண்பர்களின் வற்புறுத்தலால் மது குடித்தேன். போதையில் வாகனம் ஓட்டியதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும் என கூறினார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, ஐதராபாத் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக விளங்கவேண்டிய நடிகர்களே, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களது ரசிகர்களும் இதையேதான் பின்பற்றுவர்கள். நிகிலுக்கு ரூ.2,600 அபராதம் விதிக்கப்படுகிறது. அவரது லைசென்ஸ் ஓராண்டுக்கு ரத்து செய்யப்படுகிறது'' என தீர்ப்பளித்தார்.
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?