என் சின்ன வயசில் என் அப்பா எனக்கு சொல்லித்தந்த கதைகள் அவர் மறைந்தாலும் அவர் சொன்ன கதைகள் காதில் இனிமையாக ஒலித்து கொண்டே இருக்கும், அப்படி என் அப்பா சொன்ன கதைகளை இங்கே பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் உண்மையா பொய்யா தெரியாது.
ஊரில் ஒரு வயதானவருக்கு கொஞ்சம் நிலம் இருந்தது, அந்த ஊருக்கு ஒண்ட வந்த பிடாரி ஒருத்தனுக்கு கொஞ்சம் பூமியை வாடகைக்கு கொடுத்தார் அவர், அந்த காலத்துல பேப்பர் எழுத்தெல்லாம் கிடையாது வாக்குதான் முக்கியமாக இருக்கும் அம்புட்டு நம்பிக்கை...!!!
வாடகை [[குத்தகை]] கொடுத்து கொண்டிருந்தவன் திடீரென பணம் கொடுப்பதை நிறுத்திவிட, பெரியவர் பூமியை காலி பண்ணசொன்னார், அதை தொடர்ந்த சண்டையின் நிமித்தம் கேஸ் கோர்ட்டுக்கு போனது, ஒண்ட வந்தவன், பெரியவர் பூமி அது அல்ல, இது என் சொந்தபூமி, பெரியவர் என்னை மிரட்டுகிறார் அந்த பூமியை தரசொல்லின்னு புகார் கொடுத்துட்டான்...
கோர்ட்டுக்கு ஒவ்வொரு நாளும் போயி விசாரிக்கபட்டனர், விசாரணையின் போது நீதிபதி முன்பு இவர்கள் இப்படி பேசுவார்களாம், ஒண்ட வந்தவன், அந்தபூமி அந்தபூமி'ன்னு சொல்வானாம். பெரியவரோ என்னுடைய பூமி என்னுடைய பூமின்னு அழுத்தமா சொல்வாராம்....
வழக்கு இழுத்து கொண்டே போயிருக்கு பலநாட்களாக, நீதிபதி இந்த இருவர் பேசும் ஸ்லாங்கை கவனித்தபடியே இருந்து கொண்டிருந்தார். தீர்ப்பு நாளும் வந்தது...
நீதிபதி தீர்ப்பு சொன்னார், இவர்கள் சொன்ன பேசிய பேச்சில் இருந்து அவர்கள் வாயின் வாக்குபடியே தீர்ப்பு சொல்கிறேன், ஒருத்தனும் தன் பூமியை அந்தபூமி அந்தபூமி என சொல்லமாட்டான், ஆக அந்தபூமி அவனுடையது இல்லை, பெரியவர் எப்போது பேசும்போதும் என்பூமி என்பூமி என அவர் பேச்சிலிருக்கும் அழுத்தமே அந்தபூமி அவருடையது என தீர்ப்பளிக்கிறேன் என தீர்ப்பு சொன்னார்.
என் அப்பா என்னை மடியில் உக்காரவச்சி சொன்ன நீதி : என்னைக்குமே அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது, ஆசைபட்டு சபைமுன் தலைகுனிந்து நிற்கக்கூடாது என்பதே....!!!
அந்த நீதி போதனைதான், நான் கஷ்டப்பட்டு கொண்டு இருந்த நாட்களில் [[http://nanjilmano.blogspot. com/2011/10/blog-post_09.html] ] அந்த நடனக்காரி நண்பிக்கு கொடுத்த நான்கு கிலோ தங்கத்தில் ஒரு பீஸில் கூட கைவைக்க மனமில்லை என நினைக்கிறேன், [[அப்பாவுக்கு நன்றி]] மலையாளி நண்பர்கள் இப்பவும் என்னை பார்த்து ஆச்சர்யமாக கேட்பார்கள், எப்படிடா உன்னால் இப்படி முடிகிறது என்று...!!! இவர்களுக்கு என்ன தெரியும் எங்க அப்பா என்ன சொல்லி வளர்த்தார் என்று....
டிஸ்கி : நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இதில் இடம் பெற்று இருந்த டிஸ்கி மாற்றப்பட்டுள்ளது.
http://dinasarinews.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?