நான் எப்போதுமே கொஞ்சம் தாமதம்.
எனவேதான் ஏழாம் அறிவு ,வேலாயுதம் பற்றி எழுதுவதில் இவ்வளவு தாமதம்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து விட்டேன்!
இதோ----
மனிதர்கள் ஆறறிவு உள்ளவர்கள் என்று சொல்கிறோம்.
இந்த ஆறறிவுகள் எவை?
தொல்காப்பியர் சொல்கிறார்---
"ஒன்றறிவு அதுவே உற்றறிவு அதுவே
இரண்டறிவு அதுவே அதனொடு நாவே
மூன்றறிவு அதுவே அவற்றொடு மூக்கே
நான்கறிவு அதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறிவு அதுவே அவற்றொடு செவியே
ஆறறிவு அதுவே அவற்றொடு மனனே"
மெய்,வாய்,மூக்கு,கண்,காது ஆகியவற்றோடு மனம் என்பதை ஆறாவது அறிவாகச் சொல்கிறார் தொல்காப்பியர்.
இதையே நாம் பகுத்தறிவு என்கிறோம்.
அப்படியானால் ஏழாம் அறிவு என்பது என்ன?
திரைப்படம் என்ன சொல்கிறது என்று எனக்குத் தெரியாது.நான் பார்க்க வில்லை
காலத்தைக் கடந்தது முக்காலமும் அறியும் திறன்தான் ஏழாம் அறிவா?
அக்காலத்தில் ஞானிகளுக்கு ஞான திருஷ்டி இருந்ததுஎன்று சொல்வார்களே அதுதான் ஏழாம் அறிவா?
அப்படியென்றால் அது வேண்டவே வேண்டாம்! வருவதைத் தெரிந்து கொண்டால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.ஒரு படத்தில் மற்றவர் மனதில் இருப்பதை அறியும் சக்தி பெற்று விவேக் கஷ்டப்படுவாரே,அது போல.
வேண்டாம் ஏழாம் அறிவு!
ஏழாம் அறிவைப் பற்றிப் பேசி விட்டோம்.
இனி வேலாயுதம்.
சூரபத்மன் என்ற அசுரன் தேவர்களையெல்லம் துன்புறுத்தி,இந்திரனையும் சிறைப் படுத்தி விட்டான்.
அவனை அழிப்பதற்காக முருகன் உருவானான்.
முருகன் போருக்குச் செல்லும்போது,அன்னை பார்வதி முருகனிடம் ஒரு சக்தி வேல் கொடுத்தாள்,சூரனைக் கொல்லும் ஆயுதமாய்.அதுதான் வேலாயுதம்.
சூரனையே பிளந்த ஆயுதம் வேலாயுதம்!
காக்க காக்க கனக வேல் காக்க!
http://cmk-mobilesms.blogspot.com
http://tamilfashionshow.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?