Wednesday 16 November 2011

முறிந்துபோன வலது கைக்கு பதிலாக சிறுவனின் இடது கையை வெட்டி “பிளேட்” வைத்த டாக்டர்கள்

 
 
குஜராத் மாநிலம் இசான்யூரைச் சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி பாவ்னா. இவர்களது மகன் கவுசிக் (9). இவன் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தபோது தவறிவிழுந்தான். இதில் அவனது வலது கை முறிந்து போனது. வலியால் அலறித்துடித்த அவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் அகமதாபாத் மாநகராட்சிக்கு சொந்தமான எல்.ஜி.மருத்துவமனையில் சேர்த்தனர்.
 
அவனது வலது கை முறிந்து போனதால் டாக்டர்கள் அவனுக்கு ஆபரேசன் செய்து "பிளேட்" பொருத்த முடிவு செய்தனர். இதன்படி நேற்று இரவு அவனுக்கு ஆபரேசன் நடந்தது. அப்போது டாக்டர்கள் சிறுவன்- கவுசிக்கின் வலது கையில் செய்ய வேண்டிய ஆபரேசனை தவறுதலாக இடது கையில் செய்தனர். நன்றாக இருந்த இடது கையை வெட்டி அதில் "பிளேட்" பொருத்தினர். ஆபரேசன் முடிந்து கவுசிக் தியேட்டரை விட்டு வெளியே வந்தபோது அவனது பெற்றோர் ஓடோடிச் சென்று மகனின் அடிபட்ட வலது கையை பார்த்தனர்.
 
அந்த கை முறிந்தபடியே இருந்தது. சற்று பதட்டம் அடைந்த அவர்கள் இடது கையை பார்த்தனர். நன்றாக இருந்த இடது கை வெட்டப்பட்டு அதில் பிளேட் பொருத்தப்பட்டிருந்ததை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது என் மகனின் நன்றாக இருந்த கையையும் டாக்டர்கள் வெட்டி நாசம் செய்து விட்டார்களே என்று கதறித்துடித்தனர். இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்திருந்த நோயாளிகள் அனைவரும் அங்கு ஓடிவந்து பார்த்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
கவுசிக்கின் பெற்றோர், உறவினர்கள் ஆபரேசன் செய்த டாக்டர்களை தேடிச்சென்றனர். இதையறிந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் மனோஜ் அங்குள்ள ராம்பக் போலீஸ் நிலையத்தில் தனது மகனுக்கு தவறாக ஆபரேசன் செய்த டாக்டர்கள் மீது புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபரேசன் செய்த டாக்டர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். எல்.ஜி. மருத்துவமனை நிர்வாகி கூறும்போது, சீனியர் டாக்டர் வெளியூர் சென்றதால் ஜூனியர் டாக்டர்கள் ஆபரேசன் செய்தனர். அவர்கள் கவனக்குறைவாக வலது கையில் செய்ய வேண்டிய ஆபரேசனை இடது கையில் செய்துவிட்டனர். அவர்கள் மீது ஒழங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger