எங்க அப்பா சொன்ன இன்னுமொரு கதை....
ஒரு குளத்துல ஒரு முதலையும், கரையின் ஓரத்துல இருந்த மாமரத்துல குடியிருந்த ஒரு குரங்கும் இணைபிரியா நண்பர்கள், குரங்கை முதலை அதன் மேலே ஏற்றி குளத்தை எல்லாம் சுற்றி காட்டும், இப்படி ஓடியாடி விளையாடி வந்தனர்...
ஒருநாள் மாமரத்தில் மாம்பழம் காய்த்து குளுங்கவே குரங்கு மாம்பழத்தை பறித்து சுவைத்து கொண்டிருப்பதை கண்ட முதலை எனக்கும் மாம்பழம் தருவாயா நண்பா என கேட்டது....
குரங்கும் ஒ தாராளமாக எனக்கூறி மாம்பழங்களை பறித்து கொடுத்தது, சாப்பிட்ட முதலை ஆஹா நல்ல ருசியாக இருக்கிறதே என சொல்லி இன்னும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிட்டது....
இப்படி கொடுத்தும் வாங்கியும், விளையாடியும் இருந்த நண்பர்களின் வாழ்க்கையில் விதியும் விளையாடியது, முதலையின் மனதில் ஒரு குரூர எண்ணம் வெளிப்பட்டது......இந்த மாம்பழமே இம்புட்டு ருசியாக இருந்தால் அதை தினமும் திங்கும் குரங்கின் குடல் எம்புட்டு சுவையாக இருக்கும் என நினைத்து கொண்டு காத்து இருந்தது....!!
ஒருநாள் வழக்கம் போல முதலை குரங்கை முதுகில் ஏற்றி வலம் வரும் போது, குரங்கின் குடல் நியாபகம் வரவே குரங்கை குளத்தின் நடுவில் கொண்டு போயி நின்று கொண்டு கேட்டது, குரங்கே குரங்கே நீ பறித்து தரும் மாம்பழங்களே எவ்வளவு சுவையாக இருக்கிறது, அப்போ அதை சாப்பிடும் உன் குடல் இன்னும் சுவையாக இருக்குமல்லவா...? என கேட்க.....
இதை சற்றும் எதிர்பாராத குரங்கு சுற்றும் முற்றும் பார்க்க, தான் தப்பிக்க முடியாதபடி நடு குளத்தில் இருப்பதை உணர்ந்த குரங்கு சமாளித்துக்கொண்டு சொன்னது, அதற்கென்ன நண்பா நான் குடலை மரத்தில் அல்லவா வைத்து விட்டு வந்தேன் என்னை அங்கே கொண்டு போ எடுத்து தருகிறேன் என சொல்ல, முதலை வேகமாக குரங்கை கரையில் கொண்டு சேர்த்தது...
கரையிறங்கிய குரங்கு வேகமாக ஓடிபோயி மரத்தில் ஏறிக்கொண்டு முதலையை பார்த்து சொன்னது "போடா ங்கொய்யால"
[[எங்க அய்யா கதையை கொஞ்சம் மாத்தி சொல்லி இருக்கிறார்னு பின்னாட்களில் புத்தகங்களில் வாசித்து தெரிந்து கொண்டேன்]]
அப்பா சொன்ன நீதி : என்னதான் நண்பனா இருந்தாலும் நாம சூதானமா இருக்கணும்....!!!
டிஸ்கி : உலக தமிழர்கள் யாவரும் அறிந்த, தமிழில் வெற்றிக்கொடி கட்டி நம் நெஞ்சில் வாழும் மகா காமெடி நடிகரின் பேட்டி, பதிவுலக வரலாற்றில் முதன் முறையாக நாஞ்சில்மனோ வலைதளத்தில் திங்கள்கிழமை வெளி வருகிறது,
அவர் யாரென்று நாளை பதிவில் சொல்கிறேன், பேட்டி எடுத்தது நாஞ்சில்மனோ...!!! காத்திருங்கள் திங்கள் வரை....!!!
http://dinasarinews.blogspot.com
http://tamilsmsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?