Saturday, 19 November 2011

அங்கதன் காத்திர��ந்தான்!-



அங்கதனால் நம்ப முடியவில்லை.

தன் தந்தை கொல்லப் பட்டாரா?இது எப்படி நடக்க முடியும்?

மாவீரனான தந்தையைக் கொல்ல அவரினும் பெரிய வீரன் வந்தானோ?

அன்னையிடம் சென்றான்.

"அம்மா என்ன நடந்தது?எப்படி இறந்தார் தந்தை?போரில் அவரை வென்று அவர் உயிர் கவர்ந்த அந்த வீரன் யார்?" கேட்டான்.

தாரை சோகமாய்ச் சிரித்தாள்.

"போரில் உன் தந்தை கொல்லப்படவில்லை அங்கதா!உன் தந்தைக்கும், சிறிய தந்தைக்கும் போர் நடக்கும் போது மறைந்திருந்து எய்யப்பட்ட பாணத்தினால் அவர் மரித்தார்" சொன்னாள் தாரை.

அங்கதன் கண்கள் சிவந்தன.உடல் துடித்தது."மறைந்திருந்து எய்யப்பட்ட பாணமா?யார் செய்தது இந்த இழி செயல்?"

"அயோத்தி மன்னன்,தசரதனின் புத்திரன் இராமன்.வனத்தில் அவன் மனைவி சீதையை இராவணன் கவர்ந்து சென்றான்.அவளைத்தேடி வரும்போது உன் சிறிய தந்தையிடம் நட்புக் கொண்டு அவருக்கு உதவுவதற்காக உன் தந்தையைக் கொன்றான் இராமன்". தாரை சொன்னாள்.

"அவ்வாறெனில் தந்தையுடன் போர் செய்து அவரை வீழ்த்தியிருக்க வேண்டும்.கோழை போல் மறைந்திருந்து கொலவதென்ன வீரம்?என்ன நியாயம்?"

"இதையேதான் உன் தந்தை இராமனிடம் கேட்டார்.

/'வாய்மையும், மரபும், காத்து, மன் உயிர் துறந்த வள்ளல்
தூயவன், மைந்தனே! நீ, பரதன்முன் தோன்றினாயே!/

என இழித்துரைத்தார்.ஆனால் இராமன் நீதியை எடுத்துச் சொல்லவும் புரிந்து கொண்டார்.அவன் அவதாரம் என்பதை அறிந்து கொண்டார். அவனால் வீடு பேறு பெற்றார்" தாரை சொன்னாள்.

அங்கதன் மனம் அதை ஏற்கவில்லை"என்ன சொல்லியிருந்தாலும், தந்தையே அதை ஏற்றுக் கொண்டிருந்தாலும் என்னால் அதை ஏற்க இயலவில்லை.என் தந்தை வஞ்சகமாகக் கொல்லப்பட்டார்.அதற்கு முதலில் அந்த இராமனையும், பின் என் சிறியதந்தை சுக்கிரீவனையும் நான் பழி வாங்குவேன்" உறுமினான்.

தாரை பயந்தாள்

பின் சொன்னாள்"மகனே! நீ வயதில் சிறியவன்.அவசரப்பட்டு ஏதாவது செய்து அதனால் நான் உன்னையும் இழக்கும் நிலை வந்து விடக் கூடாது. உன் சிறிய தந்தை இப்போது அரசர்.அனுமான் துணையிருக்கிறான்.படை இருக்கிறது.இராமனும்,வில் வித்தையில் தேர்ந்தவன் மட்டுமல்ல. அவதாரம்.  உன் கோபத்தை அடக்கு.சாந்தமடை உன் சிறிய தந்தையிடமும் இராமனிடமும் சென்று ஆசி பெற்று வா""

இவ்வாறு பலவிதமாய் அங்கதனுக்கு அறிவுரை சொன்னாள்.

அங்கதன் யோசித்தான்.

"அன்னையிடம் இது குறித்து மேலும் விவாதம் செய்வது பயனற்றது.எனவே இப்போதைக்கு அன்னை சொல்வதைக் கேட்போம்  "

"அம்மா!உங்கள் கட்டளை" அடி பணிந்தான்.

அவள் கட்டளைப்படி ஆசி பெறப் புறப்பட்டான்.

ஆனால் அவன் மனம் பேசியது"காத்திருப்பேன் ,சரியான காலத்துக்காக. இந்த இராமனைக் கொன்று ஒரு நாள் பழி தீர்ப்பேன்அது வரை காத்திருப்பேன்"

அங்கதன் காத்திருந்தான்.          

---------தொடரும்        




http://cmk-mobilesms.blogspot.com



  • http://dinasarinews.blogspot.com

  • 0 comments:

    Post a Comment

    உங்களது கமெண்ட் என்ன ?

    My Blog List

    Popular Posts

    Popular Posts

     
    Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
    Theme Template by BTDesigner · Powered by Blogger