பழைய காலத்துல நடந்த சம்பவம் எங்க அப்பா அழகா விவரிச்சு சொல்லும்போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கும் மனசுக்கு, ஊரில் பெரியவரை ஒருத்தன் ஜாதி விரோதத்தால் வெட்டி கொலை செய்துவிட்டான்...
கொலையாளியையும் சந்தேகத்தில் போலீஸ் பிடித்துவிட்டாலும் ஆதாரம் இல்லை, கேஸ் கோர்ட்டுக்கு போனாலும், கொலை செய்த அருவாள் மட்டுமே ஆதாரமாக இருக்கிறது, கொலையாளியோ அந்த அருவாள் என்னுடையது அல்ல என்று அடித்து சொல்லிவிடவே கேஸ் விவகாரம் நீண்டுகொண்டே போனது...
போலீஸ் எவ்வளவோ விசாரிச்சும் அவன் கொலை செய்ததற்கான ஆதாரம் கிடைக்கவே இல்லை, கொலை செய்தது அவன்தான் என நன்றாக தெரிஞ்சும் கொலையாளியை ஒன்றும் செய்ய முடியவில்லை ஆதாரம் இல்லையே...
எல்லாவற்றையும் பார்த்து, கணித்து, கவனித்து கொண்டிருந்தார் நீதிபதி, கடைசி வரையும் ஆதாரம் கிடைக்காததால், இந்த வழக்கை தள்ளுபடி செய்து சந்தேகப்பட்ட நபரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பு சொன்னார்.
கொலையாளி மிகுந்த சந்தோசத்தோடு கிளம்பினான் பரிவாரத்தோடு, அப்போது திடீரென நீதிபதி சத்தமாக சொன்னார், அதான் கேஸ் முடிஞ்சி போச்சுல்ல அந்த அருவாள் யாருடையதோ அதை எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும், கொலையாளி ஓடிப்போயி அருவாளை எடுக்கவும், கொலையாளி வகையாக சிக்கிக்கொண்டான்.....!!!
அப்பா சொன்ன நீதி : தப்பு செய்தால் என்னதான் தகடுதத்தம் செய்தாலும், தண்டனை நிச்சயம் உண்டு...!!!
மனோ"தத்துவம் : சந்தனம் சுமக்கும் கழுதைக்கு சந்தனத்தின் மகிமை தெரியாது....!!!
http://dinasarinews.blogspot.com
http://tamilsmsgalatta.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?