அன்னை உரைத்தபடி சுக்ரீவனிடமும் இராமனிடமும் ஆசி பெற அங்கதன் சென்றான்.இருவரும் இணைந்தே காணப்பட்டனர்.சுக்ரீவனை முதலில் வணங்கினான்.அவனும் ஆசி கூறினான்.பின் இராமனை வணங்கினான். "நீண்ட ஆயுளுடன் சிறப்பாக வாழ்வாய்" என வாழ்த்திய இராமன்,அவனை மார்புறத்தழுவினான்.அந்த நேரத்தில் அங்கதன் ஒரு புதிய அனுபவத்தை அடைந்தான்.எங்கோ மிதப்பது போன்ற அனுபவம்.மயிர்க் கூச்செரிந்தது.
அணைப்பிலிருந்து விடுபட்ட அங்கதன் தன் கோபம் குறைந்தது போல் உணர்ந்தான்.
"கூடாது.இவன் என் தந்தையைக் கொன்றவன் .காலம் கருதி நான் இப்போது நட்புடன் இருப்பேன்.காத்திருப்பேன் தகுந்த காலத்துக்காக"என மனதுள் உறுதி பூண்டான்.
சிறிது காலத்துக்குப் பின் சீதையைத் தேடி பல திசைகளிலும் வானரர்கள் சென்றபோது அங்கதனும் அதில் ஒருவன்.
பின் சீதையை அனுமன் கண்டு வந்து சேதி சொன்னபின்,இராமன் வானர சேனையோடு போருக்குப் புறப்பட்டான். போருக்கு முன் தூது அனுப்ப வேண்டும் என்று எண்ணியபோது இராமன் அங்கதனைத் தேர்ந்தெடுத்தான்.
அங்கதன் போய் இராவணனைச் சந்தித்தான்.அப்போது அவன் கேட்ட கேள்வி அங்கதனைக் கலங்கச் செய்தது.
'"தாதையைக் கொன்றான் பின்னே தலை சுமந்து, இரு கை நாற்றி,
பேதையன் என்ன வாழ்ந்தாய்"" என்று அவன் கேட்ட போது, அங்கதன் தன் நிலைமைக்காக நொந்தான்.தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்,
பேதையன் என்ன வாழ்ந்தாய்"" என்று அவன் கேட்ட போது, அங்கதன் தன் நிலைமைக்காக நொந்தான்.தன்னைத்தானே தேற்றிக் கொண்டான்,
"காலம் வரும் அது வரை காத்திருப்பேன்." என்று.
எல்லாம் முடிந்து கிஷ்கிந்தை திரும்பியதும் அங்கதன் அன்னையைக் காண ஓடோடி வந்தான்.
"அம்மா!நடந்ததைக் கேள்விப் பட்டீர்களா?"
"எதைச் சொல்கிறாய் மகனே?இராமனின் வெற்றிதானே"
"அதுவல்ல.அதற்குப் பின் நடந்தது.இராமன் சீதையைத் தீக்குளிக்கச் சொன்னானே அது.சே,தன் மனைவி மீதே நம்பிக்கை இல்லாத இவன் ஒரு ஆண்மகனா?"
""தவறு மகனே! இராமனுக்கு மனைவி மீது முழு நம்பிக்கை இருந்ததால் தான் துணிந்து தீக்குளிக்க செய்து அதன் மூலம் உலகத்தாருக்கு உணர்த்தச் செய்தான்.அவள் ஒரு கற்புக்கனல்.அக்கனலை தீ ஒன்றும் செய்ய முடியாது என்பதை அவன் அறிவான்!"
அங்கதன் யோசனையுடன் அகன்றான்.
இராமன் அயோத்தி திரும்பினான்.
சில நாட்களுக்குப் பின் செய்தி வந்தது.இராமன்,யாரோ ஒருவனின் அவதூறுப் பேச்சைக் கேட்டுச் சீதையைக் காட்டுக்கு அனுப்பி விட்டான் என்று.
அங்கதன் தாரையிடம் சொன்னான்.
தாரை கலங்கிப்போனாள்.எப்படி, ஏன்,என்று ஆயிரம் கேள்விகள்.
அங்கதன் சொன்னான்"அம்மா!அன்று சொன்னீர்கள்.இராமன் தன் மனைவியை நம்புகிறான் என்று.இப்போது என்னநடந்தது?எவனோ ஒருவன் சொன்ன சொல்லுக்காக மனைவியைக் காட்டுக்கனுப்பி விட்டான்.
யாருமே செய்யத் துணியாத ஒரு கொடுஞ்செயல் செய்தான்"
தாரை சொன்னாள்"மகனே! இராமன் அரசன்.அவன் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.அரசனின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாயிருக்க வேண்டும்.எனவேதான் இந்த முடிவு எடுத்திருக்கிறான்.அவன் சீதையை எவ்வளவு நேசித்தான் என்பது யாவரும் அறிந்ததே.வனத்தில் சீதையைப் பிரிந்தபோது நிலை குலைந்து போனானே!"
"தன் உயிரினும் மேலான சீதையை இன்று பிரிந்து தன்னைத்தானே தண்டித்து கொண்டு ,உயிரற்ற உடல் போல் இருக்கும் அவனுக்கு வேறென்ன தண்டனை இனி நீ தரப்போகிறாய்? விட்டு விடு ."
அங்கதன் சிந்தித்தான்." /ஆவியை, சனகன் பெற்ற அன்னத்தை, அமிழ்தின் வந்த தேவியை, பிரிந்த பின்னை,/ இராமன் ஒரு உயிரற்றவன்தான் அவனைக் கொல்லுதல் நமக்கு அழகன்று."
ஆனால்...........
இன்று அரச போகத்தில் தன்னை மறந்து ,நாட்டை மறந்து.குடி,பெண்டிர் எனப் போகத்தில் இருக்கும் அந்தத் துரோகி சிற்றப்பன்?இப்போதே நாட்டு மக்கள் என் மீது அதிக அன்பு கொண்டுள்ளனர். அதிகம் படை வீரரும் நான் சொல்வதைக் கேட்கச் சித்தமாயிருக்கின்றனர். நாள் நெருங்கி விட்டது. அந்த சுக்ரீவனை நிச்சயம் கொல்வேன்"
அங்கதன் காத்திருந்தான்!
டிஸ்கி—இது முழுவதும் கற்பனையே.இராமாயணத்தில் இதற்கான கிளைக் கதையோ,கருவோ கிடையாது.
தந்தையின் வீரத்தைக் கண்டும் அது பற்றிப்பலர் கூறக்கேட்டும் வளர்ந்த ஒரு சிறுவன்,தன் தந்தை வஞ்சகமாக் கொல்லப்பட்டார் என்றறியும்போது, என்ன மன நிலையை அடைவான்?அதைத்தான் நான் இங்கு கதையாக்கி விட்டேன்.இது முழுவதும் அங்கதன் பார்வையே!
"மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை,"----போற்றுகிறேன்!.
தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை, தானே
இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, 'இராமன்' என்னும்
செம்மை சேர் நாமம் தன்னை,"----போற்றுகிறேன்!.
நன்றி.
http://cmk-mobilesms.blogspot.com
http://dinasarinews.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?