முதலமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் இன்று (17.09.2011) பேசினார்.
கேள்வி: நரேந்திர மோடி உண்ணாவிரதத்துக்கு அ.தி.மு.க. ஏன் ஆதரவு அளிக்கிறது?
பதில்: நரேந்திர மோடி சமூக நல்லிணக்கம் மற்றும் சமாதானம், ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். மதச்சார்பற்ற நிலை, சமூக ஒற்றுமை, அமைதி ஆகியவைதான் எங்கள் கொள்கை. அவரது நிலையும் இதை ஒட்டியே இருக்கிறது. நரேந்திரமோடி என்னுடன் போனில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்துக்கு சிலரை அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். எனவே எங்கள் கட்சியின் பாராளுமன்ற தலைவர் தம்பித்துரை, மைத்ரேயன் ஆகிய 2 எம்.பி.க்களை அனுப்பி வைத்தேன்.
கேள்வி: அரசியல் மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்று கருதலாமா?
பதில்: அப்படியல்ல. நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஆதரவு தெரிவித்துள்ளேன். வேறு எதுவும் இல்லை.
கேள்வி: 2014 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டால் ஆதரிப்பீர்களா?
பதில்: இது யூகத்தின் அடிப்படையிலான கேள்வி. அப்படி அறிவிக்கப்பட்டால் அப்போது பதில் சொல்வேன்.
கேள்வி: பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழ்நாட்டின் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் தடைவிதித்து இருக்கிறதே இதை ஒரு பின்னடைவாகக் கருதுகிறீர்களா?
பதில்: இல்லை. எனது வழக்குரைஞர்கள் இந்த வழக்கை நன்றாக கையாண்டு வருகிறார்கள்.
கேள்வி: 20ந் தேதி பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராவீர்களா?
பதில்: தேதி நிர்ணயித்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் பல வழக்குகளில் ஆஜராகியுள்ளேன். இது ஒன்றும் எனக்குக் புதிதல்ல என்றார்.
http://snipshot.blogspot.com
http://snipshot.blogspot.com
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?