மோடியின் மேக் இன் இந்தியா திட்டம்...!!!
மேக் இன் இந்தியா என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்யும் மோடி செய்த வேலை என்ன தெரியுமா...??
இந்தியாவின் 66வது குடியரசு தினம் நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியது மோடி அணிந்திருந்த ஆடை.
நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்ற தனது முழு பெயரையும் கோடுகள் போன்று எழுதப்பட்டிருந்த ஆடை.
உலகிலேயே இந்த ஆடைக்கு தேவையான துணியை வழங்குவது லண்டனை சேர்ந்த Holland & Sherry Fabrics என்ற நிறுவனம். இது உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம். இந்த நிறுவனம் பிரத்யேகமாக பல வகை ஆடைகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வரிசையில் அந்த நிறுவனம் வேளியிட்ட ஓர் ஆடைதான் "Signature Fabric". இது பல ரகங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ஒரு மீட்டர் துணி 300 பவுண்டுகள்.
இதன் சிறப்பம்சமே துணியில் கோடுகள் போன்று தனிமனிதர் பெயரோ அல்லது ஒரு நிறுவனத்தின் பெயரோ நெய்து தரப்படும்.
இந்த ஆடையை தைப்பது சிட்னியை சேர்ந்த உலக புகழ் பெற்ற நிறுவனமான Tom James என்ற நிறுவனம்.
மோடி நேற்று முன்தினம் அணிந்திருந்த ஆடையின் துணி மட்டும் 7 மீட்டர் நீளம் கொண்டது. அதன் மதிப்பு மட்டும் 3000 பவுண்டுகள்(2,78,200 ரூபாய்). இதனை தைப்பதற்க்கும் சேர்த்து ஆன மொத்த தொகை 10,000 பவுண்டுகள்(9,27,332 ரூபாய்).
எளிமையான தலைவர், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்திய கலாச்சாரத்தை காப்பாற்றும் மிக அற்புதமான தலைவர் செய்த வேலை தான் இது..!!
லண்டனில் இருந்து துணி...!!
அதனை தைக்க ஆஸ்திரேலிய கம்பெணி...!!
மேலும் தகவலுக்கு குடியரசு தின விழா பற்றிய கட்டுறையை படியுங்கள்......
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?