Monday, 2 June 2014

திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்து மாட்டிக்கொண்ட திருடன் Thief Sends Facebook Friend Request to Victim Lands in Jail

திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்து மாட்டிக்கொண்ட திருடன் Thief Sends Facebook Friend Request to Victim Lands in Jail

 

வாஷிங்டன், ஜூன் 2-

அமெரிக்காவில் திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்ததால் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் இப்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறான்.

ரிலே முல்லின்ஸ்(28) என்ற அந்த வாலிபர், கடந்த சில தினங்களுக்கு முன் படகு முனையத்தில் தனியாக நின்ற ஒரு பெண்ணைத் தாக்கி அவரிடம் இருந்த கைப்பையை பறித்துச் சென்றுள்ளான். பின்னர் தற்செயலாக அந்த பெண்ணின் பேஸ்புக் முகவரியை தொடர்பு கொண்ட அந்த ஆசாமி நட்பு வைத்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளான்.

பேஸ்புக்கில் முல்லின்ஸ் படத்தைப் பார்த்ததும் அந்த பெண்ணுக்கு சந்தேகம் எழுந்தது. அவன் கையில் முக்கோண வடிவில் பச்சை குத்தியிருந்ததை வைத்து, தன்னிடம் கைப்பையை பறித்த திருடன்தான் இவன் என்று அடையாளம் கண்டுகொண்ட அந்த பெண், உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger