Home
»Unlabelled
» கறுப்பு பண மீட்புக்கான செயல்திட்டம் பற்றி முதல் கூட்டத்தில் முடிவு first meeting project results in recovery of black money
கறுப்பு பண மீட்புக்கான செயல்திட்டம் பற்றி முதல் கூட்டத்தில் முடிவு first meeting project results in recovery of black money
கறுப்பு பண மீட்புக்கான செயல்திட்டம் பற்றி முதல் கூட்டத்தில் முடிவு first meeting project results in recovery of black money புதுடெல்லி, ஜூன்.3- வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கறுப்பு பண மீட்பு பற்றி விசாரணை நடத்துவதற்காகவும், இதுதொடர்பான வழக்கு விசாரணைகளை கண்காணிக்கவும் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டது. அதற்கு 3 வார கால அவகாசம் அளித்தபோதிலும், முந்தைய மன்மோகன்சிங் அரசு அமைக்கவில்லை. மேலும் ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டபோது, தற்போதைய நரேந்திர மோடி அரசு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. மத்திய மந்திரிசபையின் முதலாவது கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு புலனாய்வு குழுவின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. குழுவின் தலைவரான சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமை தாங்கினார். ரிசர்வ் வங்கி துணை கவர்னர், உளப்பிரிவு டைரக்டர், அமலாக்கப்பிரிவு இயக்குனர், சி.பி.ஐ. இயக்குனர், மத்திய நேரடி வரிகள் வாரிய இயக்குனர், வருவாய் புலனாய்வு இயக்குனர், 'ரா' இயக்குனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கறுப்பு பண மீட்பு விவகாரத்தில், மேற்கொண்டு முன்னோக்கி செல்வது குறித்த வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. பின்னர், இதுபற்றிய செயல்திட்டம் முடிவு செய்யப்பட்டது. சிறப்பு புலனாய்வு குழுவின் அடுத்த கூட்டம் விரைவில் நடைபெறுகிறது. அதில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படுகிறது. இத்தகவல்களை மத்திய அரசு செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ... |
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?