Monday, 2 June 2014

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு nayandhara oppose for taking a film about her

தனது வாழ்க்கையை படமாக எடுக்க நயன்தாரா எதிர்ப்பு nayandhara oppose for taking a film about her

Error! Filename not specified.

நயன்தாரா வாழ்க்கை கதையை படமாக எடுக்க முயற்சிகள் நடக்கிறது. திரையுலகில் நிகழ்த்திய சாதனைகள், காதல் சர்ச்சைகள் அனைத்தையும் உள்ளடக்கிய படமாக இது இருக்கும் என்கின்றனர்.

நயன்தாரா 2005–ல் ஐயா படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சந்திரமுகி படத்தில் ரஜினி ஜோடியாக நடித்தார். ஸ்ரீராமராஜ்ஜியம் தெலுங்கு படத்தில் சீதை வேடத்தில் நடித்தார். இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். நிறைய ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

வல்லவன் படத்தில் நடித்த போது சிம்புவுடன் காதல் வயப்பட்டார். சில மாதங்களிலேயே அது முறிந்தது. அதன்பிறகு டைரக்டர் பிரபுதேவாவை காதலித்தார். இருவரும் திருமணம்வரை வந்தனர். இதற்காக மதம் மாறவும் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் இதுவும் முறிந்து போனது. தற்போது சினிமாவில் மீண்டும் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார்.

நயன்தாரா வாழ்க்கையை படமாக்கினால் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என கருதி புது டைரக்டர் ஒருவர் அதற்காக திரைக்கதையை உருவாக்கியுள்ளார். நயன்தாராவிடம் இதற்கான அனுமதி கேட்டு அணுகினார். நயன்தாரா இதற்கு சம்மதிக்கவில்லை. தன் வாழ்க்கையை படமாக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

...

 

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger