Friday, 20 December 2013

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

Img பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது Petrol and diesel prices increase

புதுடெல்லி, டிச.21-

டீலர்களுக்கு கமிஷன் தொகை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு 49 காசும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விற்பனை டீலர்களின் கமிஷன் தொகையை மத்திய அரசு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்த்தியது.

அதன்படி ஒரு கிலோ லிட்டருக்கு 912 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1089 ஆக உயர்ந்தது. கமிஷன் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டு கடந்த நிலையில், மீண்டும் அவர்களின் கமிஷனை உயர்த்த வேண்டும் என்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துக்கு கோரிக்கை விடுத்து இருந்தன.

ஆனால் டெல்லி, சத்தீஷ்கார் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் டீலர்களின் கமிஷனை உயர்த்த முடியவில்லை. தற்போது தேர்தல் முடிவுற்றதை தொடர்ந்து டீலர்களின் கமிஷனை உயர்த்த மத்திய அரசு நேற்று முடிவு செய்தது.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசும், டீசல் விலை லிட்டருக்கு 10 காசும் (இதர வரிகள் சேர்க்கப்படவில்லை) உயர்த்தப்பட்டன. பெட்ரோல் விலையை பொறுத்தவரை, வழக்கமாக மாதந்தோறும் இரு முறை (1 மற்றும் 16-ந்தேதி) சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்க உரிமை வழங்கப்பட்டு உள்ளது.

அதன்படி கடந்த நவம்பர் 1-ந்தேதி லிட்டருக்கு ரூ.1.15 குறைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 21 காசு கமிஷன் உயர்வுடன் சர்வதேச விலை நிலவரத்தின் அடிப்படையில் லிட்டருக்கு 28 காசும் உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை மொத்தம் 49 காசு உயர்த்தப்பட்டு உள்ளது.

அதன்படி, சென்னையில் ரூ.74.22 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ.74.71 ஆக உயர்ந்தது. டெல்லியில் ரூ.71.02 ஆக இருந்து வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.71.51 ஆக உயர்ந்தது. கொல்கத்தாவில், 53 காசுகளும், மும்பையில் 52 காசுகளும் விலை உயர்ந்துள்ளது.

டீலர் கமிஷன் தொகை உயர்வான லிட்டருக்கு 9 காசு மட்டுமே டீசல் விலையில் உயர்த்தப்பட்டு உள்ளது. புதிய விலைப்படி சென்னையில், ரூ.57.23 ஆக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 57.32 ஆக உயர்ந்தது.

டெல்லியில், ரூ.53.67-ல் இருந்து ரூ.53.78 ஆக உயர்த்தப்பட்டது.
கொல்கத்தாவில், 10 காசுகளும், மும்பையில் 10 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட்டது.
...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger