Friday, 20 December 2013

சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh சண்டிகரில் பள்ளி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்கள் 5 பேர் கைது 5 policemen arrested for alleged gang molestation of school girl in Chandigarh

சண்டிகர், டிச. 20-

சண்டிகர் நகரில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கடந்த சில தினங்களுக்கு முன் 17வயது பள்ளி மாணவி ஒருவர் தனது குடும்ப பிரச்சனை பற்றி புகார் அளித்துள்ளார். அவர் பேசிய செல்போன் நம்பரை வைத்து அவரது விலாசத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்று போலீஸ் வேனில் கடத்திச் சென்று துப்பாக்கி முனையில் வேனுக்குள் வைத்தே கற்பழித்துள்ளனர். இவ்வாறு பல வாரங்கள் தொடர்ந்து சித்ரவதை அனுபவித்த அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றபோதுதான், நடந்த சம்பவம் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவியிடம் நீதிபதி முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டு, வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறை போலீஸ்காரர்கள் 4 பேர், குற்றப்பிரிவு போலீஸ்காரர் ஒருவர் ஆகியோர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்களை 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். முன்னதாக 5 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் மருத்துவ சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பா.ஜனதா, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வெளியில் போராட்டம் நடத்தினர். பின்னர் திடீரென அவர்கள் போலீஸ்காரர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

...

0 comments:

Post a Comment

உங்களது கமெண்ட் என்ன ?

My Blog List

Popular Posts

Popular Posts

 
Copyright © . தினசரி செய்திகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger