Img காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்: நரேந்திர மோடி பேச்சு Congress absence india to create must Narendra Modi speech
வாரணாசி, டிச.21-
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் பா.ஜனதா சார்பில் நேற்று 'விஜய் சங்நாத்' பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கூறியதாவது:-
உத்தரபிரதேசத்தில் உங்கள் மூதாதையர்கள் ராம ராஜ்ஜியத்தை நிறுவினர். ஆனால் தற்போது அதை எங்குமே பார்க்க முடியவில்லை. இதனால் மக்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே மாநிலத்தில் மீண்டும் ராம ராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டியது அவசியம்.
இது நீங்கள் நினைத்தால் நிச்சயமாக சாத்தியமாகும். இதற்காக நீங்கள் சரியான அரசை தேர்ந்தெடுத்தால் அதை (ராம ராஜ்ஜியம்) நீங்கள் அடைய முடியும். அதை செயல்படுத்த உங்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
சிறந்த களப்பணியாற்றும் அரசை தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது. வெறும் வாக்குறுதிகளை கேட்டு மக்களுக்கு போரடித்து விட்டது. மக்களுக்கு நாங்கள் வெற்று வாக்குறுதிகளை அளிக்கவில்லை. மாறாக பல்வேறு திட்டங்களைச் சொல்லியே அவர்களை சந்திக்கிறோம்.
உத்தரபிரதேசத்தில் கங்கை நதி தூய்மைப்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி வெற்று வாக்குறுதிகளை அளித்தது. இத்திட்டத்துக்காக பல்வேறு குழுக்களையும் அமைத்தது. ஆனால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது.
கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்காக ராஜீவ்காந்தி ஆட்சிக்காலத்தில் இருந்து எத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்பட்டது? என்பதை நாட்டு மக்களுக்கு பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும். குஜராத்தில் பாயும் சபர்மதி நதியை பா.ஜனதா அரசு தூய்மைப்படுத்தியது. அதைப்போல கங்கை நதியை ஏன் தூய்மைப்படுத்த முடியவில்லை?
நெருங்கி வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஏழைகள் கோஷத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அக்கட்சிக்கு ஏழைகள் மீது அக்கறை எதுவும் இல்லை. நாட்டில் வறுமைக்கு காரணமே ஒரு குடும்பம் தான். எனவே காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும்.
டீ விற்பவர் நாட்டின் பிரதமராக முடியாது என சமாஜ்வாடி கட்சியினர் கூறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. மக்களின் ஆசீர்வாதம் இருந்தால் டீ விற்பவர் மட்டுமல்ல நெசவாளி, விவசாயி ஏன் செருப்பு தைப்பவர் கூட பிரதமராக முடியும்.
இவ்வாறு நரேந்திர மோடி கூறினார்.
...
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?