Jayalalitha prime minister welcome Interview with Former Prime Minister Deve Gowda ஜெயலலிதா பிரதமராவதை வரவேற்கிறேன்: முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேட்டி Jayalalitha prime minister welcome Interview with Former Prime Minister Deve Gowda
ஸ்ரீரங்கம்,டிச.14-
ஸ்ரீரங்கத்தில் முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவருமான தேவே கவுடா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இந்தியாவின் பிரதமர் ஆகும் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன. தென் இந்தியாவில் இருந்து நரசிம்மராவுக்குப் பிறகு நானும்(தேவே கவுடா) பிரதமர் ஆனேன். ஜெயலலிதா இந்தியாவின் பிரதமர் ஆவதை நான் வரவேற்கிறேன். அதற்காக ஜெயலலிதாவை நான் ஆசிர்வதிக்கிறேன்.
ஓரின சேர்க்கை கிரிமினல் குற்றம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்ததற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி மத்திய அரசு அந்த சட்டத்தை மாற்ற விரும்பினால் பாரதீய ஜனதா தலைவர் சுஷ்மா சுவராஜ் கருத்து தெரிவித்துள்ளபடி அனைத்து கட்சிகளும் சேர்ந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும்.
மத்திய அரசு தனிப்பட்ட முறையில் இதில் முடிவு எடுக்கக்கூடாது. சமீபத்தில் நடந்து முடிந்த 4 மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசியது உண்மைதான். இந்த தேர்தலின் முடிவு காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதையும் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஏற்க முடியாது என்ற மக்களின் முடிவையும் திட்டவட்டமாக காட்டுகிறது.
டெல்லி தேர்தலில் எவ்வளவு தூரம் மக்களை கவர காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகள் எடுத்து இருந்தாலும் காங்கிரஸ் கட்சியை மக்கள் எதிர்க்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவில் பகிரங்கமாக தெரிவித்து விட்டனர்.
தேசிய அளவிலும் இந்த தேர்தல் முடிவு பிரதிபலிக்கும். ஆம் ஆத்மி கட்சி தொடங்கிய 9 மாதத்திலேயே புது கலாசாரத்தை மக்களுக்கு தெரிவித்து விட்டது. ஊழலற்ற அரசு தான் மக்களின் எதிர்காலம் என்பதை மக்களுக்கு அந்த கட்சி உணர்த்தி விட்டது.
இவ்வாறு தேவே கவுடா கூறினார்.
...
Jayalalitha prime minister welcome Interview with Former Prime Minister Deve Gowda
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?