GMR decide to sell Delhi Daredevils team டெல்லி டேர்டெவில்ஸ் அணியை விற்க ஜி.எம்.ஆர். நிறுவனம் முடிவு GMR decide to sell Delhi Daredevils team
இஸ்தான்புல், டிச. 13-
நாட்டின் பல்வேறு கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வரும் ஜி.எம்.ஆர். நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற அதன் தலைவர் முடிவு செய்துள்ளார்.
இதன் ஒரு பகுதியாக அந்நிறுவனத்திடம் உள்ள டெல்லி டேர் டெவில்ஸ் அணியை விற்பது தொடர்பாக இந்நிறுவனம் கோடீஸ்வரர் லட்சுமி மிட்டலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதுதவிர துருக்கியுலுள்ள இஸ்தான்புல் சபீஹா கோக்சென் விமான நிலையத்தின் மீதான தனது 40 சதவிகித பங்கை 350 மில்லியன் டாலருக்கு விற்கவும் முடிவு செய்துள்ளது.
2014 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக மாற்ற முடிவு செய்துள்ள இதன் தலைவர் ஜி.எம்.ராவ், கடந்த மார்ச் மாதம் சிங்கப்பூரில் உள்ள தனது மின்சார நிறுவனத்தை 482 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்தார்.
மேலும் இந்தியாவிலுள்ள தனது இரண்டு நெடுஞ்சாலை திட்டங்களை 70 மில்லியன் டாலருக்கு விற்கவும், இங்குள்ள மின்சாரப்பணிக்கான திட்டம் ஒன்றை விற்கவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
...
GMR decide to sell Delhi Daredevils team
0 comments:
Post a Comment
உங்களது கமெண்ட் என்ன ?